Published:Updated:

அப்துல் கலாம் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் மரியாதை... ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு கெடுபிடி!

அப்துல் கலாம் வீட்டுக்கு வந்த தமிழ்நாடு ஆளுநர்

ராமேஸ்வரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனுஷ்கோடி, அப்துல் கலாம் வீடு, நினைவிடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வருகை புரிந்தார். கோயிலில் அதிகாலை ஸ்படிக லிங்க பூஜையில் கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து குடும்பத்தினருடன் தனுஷ்கோடியைச் சுற்றிப் பார்க்கச் சென்றார். இதையடுத்து நேற்று மாலை முதல் தனுஷ்கோடியில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர். சுற்றுலாப்பயணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆளுநர் வந்து செல்லும் வரை பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் தனுஷ்கோடியில் ஹோட்டல் தொழில் செய்துவரும் பெண்கள் உணவு தயாரிப்புப் பொருள்களைத் தலையில் சுமந்தபடி சுமார் 15 கிலோமீட்டர் நடந்தே சென்றனர். ஆளுநர் தனுஷ்கோடி வந்து சென்ற பிறகு பேருந்து சேவை வழக்கம்போல் இயக்கப்பட்டது.

அப்துல் கலாம் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் மரியாதை... ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு கெடுபிடி!
அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஆளுநர்

தனுஷ்கோடியைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டுக்குக் குடும்பத்துடன் சென்றார். அவரை அப்துல் கலாமின் அண்ணன் மகன் சலீம் வரவேற்று இல்லத்துக்குள் அழைத்துச் சென்று, அவர் பயன்படுத்திய பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட செய்தார்.

அதன் பின்னர் அப்துல் கலாமின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அங்கு ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நினைவுப்பரிசு வழங்கினார். பின்னர் அங்குள்ள வருகைப் பதிவேட்டில் தன்னுடைய வருகையைப் பதிவுசெய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆளுநருக்கு நினைவு பரிசு வழங்கிய ஆட்சியர்
ஆளுநருக்கு நினைவு பரிசு வழங்கிய ஆட்சியர்

இதையடுத்து அங்கிருந்து ராமநாதபுரம் புறப்பட்ட அவர், சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, மதுரை விமான நிலையத்துக்குப் புறப்பட்டு சென்றார்.

ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு கருதி பக்தர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வெளியூரிலிருந்து பஸ், கார், வேன்களில் வந்த பக்தர்களை ராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகிலையே பேரி கார்டுகள் வைத்து போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் கோயிலுக்கு நடந்தே சென்றனர் பக்தர்கள்!