Published:Updated:

நீட் விலக்கு மசோதா: ``குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பினார் ஆளுநர்” - முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு மசோதா: ``குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பினார் ஆளுநர்” - முதல்வர் ஸ்டாலின்

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக ஆளுநர் ரவி, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பாமல், தமிழக அரசுக்கே திருப்பியனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தி, சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் ஆளுநரை மாற்றக்கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஆளுநர் ஏப்ரல் 14-ஆம் தேதி வைத்த தேநீர் விருந்தையும் தமிழ்நாடு அரசு புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி
முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

இந்தநிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இது தொடர்பாக பேசியதாவது, ``தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவரும் நீட் தேர்விலிருந்து நமது மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி அறிவீர்கள்.

இதன் முதல் படியாக நாம் அனைவரும் இணைந்து சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை ஆளுநர் மறுபரிசீலனை செய்யுமாறு கோரியதும், அதுகுறித்து அனைத்துச் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரிவாக விவாதித்து, சில தினங்களுக்குள்ளாகவே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுதொடர்பாக ஆளுநரை நான் நேரில் சந்தித்து, மேலும் தாமதமின்றி இந்தச் சட்டமுன்வடிவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும், பிரதமரையும், உள்துறை அமைச்சரைம் சந்தித்து இந்தச் சட்டமுன்வடிவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தினேன். அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி
முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி

இந்தத் தொடர் முயற்சிகளின் பயனாக, ஒரு வரலாற்று நிகழ்வாக, நாம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் விலக்கு சட்டமுன்வடிவினை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்கள் என்ற தகவலை ஆளுநரின் செயலர் அவர்கள் சில மணித்துளிகளுக்கு முன்பாக என்னிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு தொடர்பான நமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்தச் சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை வைக்கிறேன்'' என்றார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism