Published:Updated:

மகள் பகிர்ந்த அனுபவம்... பெரிய கோயில், சரஸ்வதி மஹால் நூலகம்! - தஞ்சைப் பயணத்தில் வியந்த ஆளுநர் ரவி

பெரிய கோயிலில் பட்டு வேட்டி, சட்டையில் ஆளுநர் ரவி ( ம.அரவிந்த் )

ஆளுநர் மகள் தனது தோழிகள் மூன்று பேருடன் ஒரு மாதத்துக்கு முன்பு தஞ்சை வந்திருந்தார். பெரிய கோயில், அரண்மனை, கல்லணை, புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.

மகள் பகிர்ந்த அனுபவம்... பெரிய கோயில், சரஸ்வதி மஹால் நூலகம்! - தஞ்சைப் பயணத்தில் வியந்த ஆளுநர் ரவி

ஆளுநர் மகள் தனது தோழிகள் மூன்று பேருடன் ஒரு மாதத்துக்கு முன்பு தஞ்சை வந்திருந்தார். பெரிய கோயில், அரண்மனை, கல்லணை, புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.

Published:Updated:
பெரிய கோயிலில் பட்டு வேட்டி, சட்டையில் ஆளுநர் ரவி ( ம.அரவிந்த் )

இரண்டு நாள் பயணமாக தஞ்சாவூர் வந்த தமிழக ஆளுநர் ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சென்னைக்குத் திரும்பியிருக்கிறார். தஞ்சை பெரிய கோயிலைப் பார்வையிட்ட ரவி, ``எனது மகள் பெரிய கோயில் சிறப்பு குறித்து வியந்து மெய்சிலிர்க்கப் பேசினார். என்னையும் சென்று பார்த்து ரசித்து வரும்படி சொன்னார். பெரிய கோயில், சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சையின் சிறப்புகளை விளக்ககூடிய குறும்படம் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன. வரலாற்று சிறப்புமிக்க ஊருக்கு வந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்” என நெகிழ்ந்திருக்கிறார்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆளுநர் ரவி
தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆளுநர் ரவி

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுவதற்காகத் தன் மனைவி லெட்சுமியுடன் கடந்த சனிக்கிழமை மதியம் தஞ்சாவூர் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று காலை திருச்சிக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னையைச் சென்றடைந்தார். தஞ்சாவூரில் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த ஆளுநர் ரவியிடம் முன்னாள் படை வீரர்கள் நலச் சங்கத்தினர், `முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீடு என்பது, தமிழகத்தில் சாதி அடிப்படைகளில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த முறை முன்பு இல்லை. எம்.பி.பி.எஸ் படிப்பில், முன்னாள் ராணுவப் படைவீரர்களின் குழந்தைகளுக்கு 1 முதல் 2 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். முன்னாள் ராணுவப் படைவீரர்களின் குழந்தைகளுக்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மூன்று ஆண்டுகளாகக் கிடைக்காமல் உள்ளது. இதற்காக தமிழக பட்ஜெட்டில், நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். பின்னர் முன்னாள் ராணுவப் படைவீரர்களுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆளுநர் ஆலோசனை நடத்தியதுடன் குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

இதைத் தொடர்ந்து சரஸ்வதி மஹால் நூலகத்துக்குச் சென்றவர் பல்வேறு மொழிகளிலுள்ள பழைமையான பொக்கிஷங்களாகக் கருதப்படுகிற ஓலைச்சுவடிகள், நூல்கள், 1888-ம் ஆண்டு வரையப்பட்ட இந்திய வரைபடம், ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மாற்றம் செய்யப்படும் பணிகளையும் பார்வையிட்டார். தஞ்சையின் சிறப்பை விளக்கும் வகையில் அரை மணி நேரம் ஓடக்கூடிய குறும்படமான ஒளி–ஒலி காட்சியைப் பார்த்து வியந்து அருகில் இருந்தவர்களிடம், ``பழைமையான சூப்பரான நகரம் தஞ்சாவூர்” என மகிழ்ந்துள்ளார்.

தொடர்ந்து தமிழகப் பாரம்பர்ய உடையான பட்டு வேட்டி, சட்டை அணிந்து தனது மனையுடன் பெரிய கோயிலுக்குச் சென்ற ஆளுநருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் வாராஹியம்மன், பெருவுடையார் சந்நிதிகளில் தரிசனம் செய்தார். கோயிலில் உள்ள சிற்பங்கள், கல்வெட்டுகளைப் பார்வையிட்டவர், ``பெரிய கோயிலைப் பார்வையிட்டுத் திரும்பிய என் மகள் பெரிய கோயில் சிறப்புகள் குறித்து மெய்சிலிரிக்கப் பேசினார். `உடனே பெரிய கோயிலுக்கு போயிட்டு வாங்கப்பா’னு சொன்னார்” என்று கூறிய ஆளுநர் பெரிய கோயில் கட்டுமானத்தைப் பற்றி வியந்து பேசியிருக்கிறார்.

சரஸ்வதி மஹால் நூலகத்தில்...
சரஸ்வதி மஹால் நூலகத்தில்...

பிறகு கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் சென்றவர், அங்குள்ள விட்டல் ருக்மிணி பாண்டுரெங்கன் கோயில் வளாகத்தில் தொடங்கப்படவிருக்கும் விஸ்வ வித்யாலயா வேத பல்கலைக்கழகக் கட்டுமானப் பணிக்காக பூஜிக்கப்பட்ட செங்கல்லை எடுத்துவைத்து அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி, ``நமது நாடு விழித்தெழுந்துள்ளது. பூமி மாதாவைக் காப்பாற்றவேண்டிய தார்மிகப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. மதம் என்று சொல்வதைவிட அது தர்மம் என்பது ஆழமான பொருளைக் கொண்டுள்ளது. அதுதான் சனாதன தர்மம்.

பூமிக்கு எவ்விதத்திலும் கெடுதல் செய்யாமல் அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். இந்தக் கடமையை வேதம் படித்தவர்கள் மூலம் செய்ய முடியும். அதேசமயம் வேதம் படிப்பது வாழ்க்கைக்கு உதவுமா என யோசிக்கின்றனர். தாய்நாட்டை, பூமியைப் பாதுகாக்கும் உணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும். அதற்கு வேதம் அவசியம் என்பதை உணர்வார்கள். அதன் மூலம் வேதம் விருத்தியாகும். இந்தியாவின் அறிவுசார் மரபு வேதத்திலிருந்து தோன்றியது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மனைவி லெட்சுமியுடன் 
ஆளுநர் ரவி
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மனைவி லெட்சுமியுடன் ஆளுநர் ரவி

நமது இந்தியா வளர்ச்சி பெறுவது உலகநலனுக்கு அவசியம். அதற்கு வேதம் போற்றி வளர்க்கப்படவேண்டியது மிக அவசியம்” என்றார். இதையடுத்து தஞ்சாவூரில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையத்துக்கு வந்த ஆளுநர் ரவியை வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முந்நூற்றுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் தங்கள் மாநிலத்தின் பாரம்பர்ய நடனமாடி வரவேற்றனர்.

பின்னர் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட கற்சிலைகள், ஓவியங்கள், சிற்பங்கள் அடங்கிய கண்காட்சியைப் பார்வையிட்டவர், தென்னகப் பண்பாட்டு மைய அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டார். இதில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா உள்ளிட்ட பலர் கலந்துகொணடனர். தொடர்ந்து இரவு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்த ஆளுநர், திருச்சிக்குச் சென்றவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னையைச் சென்றடைந்தார்.

சரஸ்வதி மஹால் நூலகம்
சரஸ்வதி மஹால் நூலகம்

ஆளுநர் தஞ்சை விசிட் குறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், ``ஆளுநரின் மகள் தனது தோழிகள் மூன்று பேருடன் ஒரு மாதத்துக்கு முன்பு தஞ்சைக்கு வந்திருந்தார். பெரிய கோயில், அரண்மனை, கல்லணை, புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். பெரிய கோயிலின் அழகு ஆளுநர் மகளை ரொம்பவே கவர்ந்தது. அதன் பிரமாண்டத்தை எண்ணி சிலாகித்தவர், `நான் போன பிறகு அப்பாவையும் வந்து பார்க்கச் சொல்ல வேண்டும்’ எனக் கூறிவிட்டுச் சென்றார்.

ஆளுநர் ரவியும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஏற்கெனவே திட்டமிட்டிருந்த நிலையில் தனது மனைவி லெட்சுமியுடன் வந்தார். பெரிய கோயில், சரஸ்வதி மஹால் நூலகம் எனப் பலவற்றைப் பார்வையிட்டவர் வரலாற்று சிறப்புமிக்க ஊருக்கு வந்தது பெருமையாக இருப்பதாக நெகிழ்ந்திருக்கிறார். அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது தனது மனைவியை அழைத்து வராமல் ஆளுநர் மட்டுமே வந்து கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது” என்றனர்.