Published:Updated:

கள்ளச்சாராய பலிகள்; `என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?' - அரசிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர்!

ஆளுநர் ரவி

கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தலைமைச் செயலருக்கு ஆளுநர் ரவி உத்தரவிட்டிருக்கிறார்.

Published:Updated:

கள்ளச்சாராய பலிகள்; `என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?' - அரசிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர்!

கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தலைமைச் செயலருக்கு ஆளுநர் ரவி உத்தரவிட்டிருக்கிறார்.

ஆளுநர் ரவி

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் எனும் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த 8 பேரும் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்திருக்கின்றனர். விழுப்புரத்தில் 62 பேர் தற்போது வரை சிகிச்சை பெற்றுவருகின்றனர். தமிழகத்தில் இரண்டு ஊர்களில் நிகழ்ந்திருக்கும் இந்தக் கள்ளச்சாராய மரணங்கள், மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

கள்ளச் சாராயம்
கள்ளச் சாராயம்

இந்த மரணங்கள் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் - செங்கல்பட்டு மதுவிலக்குப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும், இந்தப் பகுதிகளில் பணியாற்றிய காவலர்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

கள்ளச்சாராயம் அருந்தி மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்குத் தலா 50,000 ரூபாயும் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மேலும், கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கள்ளச்சாராய பலிகள்; `என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?' - அரசிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர்!

அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆளும் தி.மு.க அரசை விமர்சித்துவருகின்றனர். அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டில் சாராய ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய  மரணங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார். தொடர் கள்ளச்சாராய மரணங்களுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

இந்த நிலையில், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு தலைமைச் செயலாளரிடம் அறிக்கை கேட்டிருக்கிறார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன... எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்... கள்ளச்சாராயம் எப்படி விற்கப்படுகிறது என்பதையெல்லாம் விரிவான அறிக்கையாக விரைந்து தாக்கல் செய்ய ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார்.