Published:Updated:

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா

அக்டோபர் 17-ம் தேதி கூடவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில், இதற்கான நிரந்தரச் சட்டம் கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

அக்டோபர் 17-ம் தேதி கூடவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில், இதற்கான நிரந்தரச் சட்டம் கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் பலரும் பாதிப்படைந்ததையடுத்து, இத்தகைய ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை வலுப்பெறவே முதல்வர் ஸ்டாலின், அத்தகைய விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வுசெய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்தார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தொடர்ந்து அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கைகளின்படி, அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடைவிதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த தடை மசோதாவுக்கு ஒப்புதல் பெறவேண்டி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியிருக்கிறார். மேலும், இந்த தடை மசோதாவுக்கு அக்டோபர் 1-ம் தேதி அனுப்பிவைக்கப்பட்ட அன்றே ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு, வரும் அக்டோபர் 17-ம் தேதி கூடவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில், இதற்கான நிரந்தரச் சட்டம் கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.