Published:Updated:

``இதை வியாபாரமாகப் பார்க்காதீர்கள்!” – முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் தமிழிசை கூறுவதென்ன?

தமிழிசை சவுந்தரராஜன்

”புதுச்சேரியில் 11 அறுவை சிகிச்சை மையங்கள் புதிதாகத் திறக்கப்படவிருக்கின்றன. அதற்கு இயந்திரங்கள் வாங்கவும், புதிதாக 350 கருவிகளுக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.” – ஆளுநர் தமிழிசை

``இதை வியாபாரமாகப் பார்க்காதீர்கள்!” – முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் தமிழிசை கூறுவதென்ன?

”புதுச்சேரியில் 11 அறுவை சிகிச்சை மையங்கள் புதிதாகத் திறக்கப்படவிருக்கின்றன. அதற்கு இயந்திரங்கள் வாங்கவும், புதிதாக 350 கருவிகளுக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.” – ஆளுநர் தமிழிசை

Published:Updated:
தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி அரசு தலைமைப் பொதுமருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் குறைபாடு இருப்பதாகப் பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு புகார்கள் கூறிவந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு பொதுமருத்துவமனையை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வுசெய்து பல்வேறு குறைபாடுகளைச் சரிசெய்ய அறிவுறுத்தியிருந்தார். இவை அனைத்தும் சரிசெய்யப்பட்டுள்ளனவா என மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று ஆய்வுசெய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  “புதுச்சேரி அரசு மருத்துவத்துறையை மேம்படுத்த மாதா மாதம் கூட்டம் நடத்தப்படுகிறது. புதுச்சேரியில் 11 அறுவை சிகிச்சை மையங்கள் புதிதாகத் திறக்கப்படவுள்ளன. அதற்கு இயந்திரங்கள் வாங்கவும், புதிதாக 350 கருவிகளுக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

சிறப்பு மருத்துவ நிபுணர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படவிருக்கிறது. புதுச்சேரியில் தற்போது நிதிப் பற்றாகுறை இல்லை.  அரசு நெடுநாள்களாக வரியை ஏற்றவில்லை. மாநில அரசு வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்பதற்காக வலி தெரியாமல் வரி உயர்த்தப்படவேண்டிய சூழலில் அரசு இருக்கிறது. அது மக்களை பாதிக்காத அளவுக்கு இருக்கும். மேலும் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 300 ஏக்கர் நிலத்தைக் கொடுக்க வேண்டும். இதை அவர் வியாபாரமாகப் பார்க்காமல், அண்டை மாநில வளர்ச்சியாகப் பார்க்க வேண்டும். இதனால் தமிழகப் பகுதிகளான விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட புதுச்சேரியை ஒட்டியிருக்கும் தமிழக மாவட்டங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.