Published:Updated:

``அமித் ஷா வருகை புதுச்சேரியின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்!” - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்

``ஆளுநரைக் கொண்டு ஆட்சி மாற்றம் செய்யப் போவதாக எதிர்க்கட்சிகள் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஆளுநர் மீது குற்றம் சுமத்துவதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது” - தமிழிசை சௌந்தரராஜன்

``அமித் ஷா வருகை புதுச்சேரியின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்!” - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

``ஆளுநரைக் கொண்டு ஆட்சி மாற்றம் செய்யப் போவதாக எதிர்க்கட்சிகள் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஆளுநர் மீது குற்றம் சுமத்துவதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது” - தமிழிசை சௌந்தரராஜன்

Published:Updated:
தமிழிசை சௌந்தரராஜன்

தென்னிந்திய வணிக மற்றும் தொழில் அவையின் சென்னை கிளை சார்பில் `புதுச்சேரி வளர்ச்சியின் மீட்டுருவாக்கம், வாய்ப்புகள், உத்திகள், தீர்வுகள்’ என்ற தலைப்பில் புதுச்சேரி தனியார் ஹோட்டலில் இன்று கருத்தரங்கு நடைப்பெற்றது. அந்த மாநாட்டினை துவக்கி வைத்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ``பல நாடுகளில் இருந்து வந்திருக்கும் முதலீட்டாளர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். புதுச்சேரியில் உள்ள இயற்கை வளமும், புதுச்சேரி அரசும் உங்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பாரதப் பிரதமரின் பெருமுயற்சியால் கோவிட் பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

அமித் ஷா
அமித் ஷா

ஒரு காலத்தில் தடுப்பூசிகளை வெளிநாடுகளில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இன்று நிலைமை மாறி இருக்கிறது. இன்று மீண்டும் கோவிட் பரவத் தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் 17 மாநிலங்களில் அறிகுறி தெரிந்திருக்கிறது. பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள்.தொழில், வணிகம், சுற்றுலா என்று எந்த துறையாக இருந்தாலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கோவிட் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். புதுச்சேரி மக்களுக்கு எந்தெந்த வகையில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டுமோ அதற்கான முழு முயற்சியை இந்த அரசு மேற்கொள்ளும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வர இருக்கிறார். புதுச்சேரிக்கான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். பாரத பிரதமர் ‘பெஸ்ட்’ என்ற திட்டத்தை கொடுத்திருக்கிறார். அதில் தொழில்துறை, கல்வி, ஆன்மிகம் எல்லாம் உள்ளடங்கி இருக்கிறது. பெஸ்ட் புதுச்சேரி திட்டத்தின் கீழ் சரியான பாதையில் முழுமையான வளர்ச்சி அடைய அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு தொழில், வணிகம், மருத்துவம் என அனைத்து துறைகளும் மீண்டெழுந்து வந்து கொண்டு இருக்கிறது. பாரத பிரதமர் எடுத்த முயற்சிகளும், திட்டங்களும் அதற்கு காரணம். தொடக்க காலத்தில் பாதுகாப்பு கவசம் (PPE Kit) நமது நாட்டில் தயாரிக்கப்படவில்லை.

விழாவில் தமிழிசை சௌந்தரராஜன்
விழாவில் தமிழிசை சௌந்தரராஜன்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. குறுகிய காலத்தில் நமது நாட்டில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள் புதுச்சேரி வந்தால் புதுச்சேரி மக்களுக்கு பயன் தருவதாக இருக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரும். புதுச்சேரி வளர்ச்சி அரசு உற்ற துணையாக இருக்கும். அரசிடமிருந்து அத்தனை ஒத்துழைப்பும் கிடைக்கும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மத்திய அமைச்சர் அமித் ஷா அவர்கள் புதுச்சேரிக்கு வருவது புதுச்சேரியின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கும். அவரின் வருகை புதுச்சேரிக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதுச்சேரி வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பல வளர்ச்சித் திட்டங்களை ஏற்கனவே திட்டமிட்டிருக்கிறோம். நலத்திட்டங்களுக்கு பாரதப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் பக்கபலமாக இருந்து வருகிறார்கள். மத்திய அமைச்சரின் வருகையை வளர்ச்சித் திட்டங்களுக்கான வருகையாக மட்டுமே பார்க்க வேண்டும். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களாகத்தான் இருக்க முடியும். நாட்டின் உள்துறை அமைச்சர் புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டங்களை தொடங்க வைக்க வருகிறார்.

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய அரவிந்தர் அவர்கள் புதுச்சேரியில் மக்களுக்கு ஆன்மிக சேவையையும் புரிந்தவர். அவரின் 150-வது பிறந்த தின கொண்டாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அமித் ஷா பங்கெடுக்க வருகிறார் என்று பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக ஆக்கப்பூர்வமான எந்த கோப்பு வந்தாலும் அதற்கு ஒப்புதல் அளிக்கிறேன். நான் என் பணியை செய்துக் கொண்டிருக்கிறேன். ஆளுநரைக் கொண்டு ஆட்சி மாற்றம் செய்யப் போவதாக எதிர்க்கட்சிகள் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. மத்திய உள்துறை அமைச்சரின் வருகையை அக்கப்பூர்வமாக மட்டுமே பார்க்க வேண்டும். அதை வேறு விதத்தில் பார்க்கக் கூடாது. எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஆளுநர் மீது குற்றம் சுமத்துவதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism