Published:Updated:

ஆன்லைன் சூதாட்டம்: ``தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது" - அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

``ஆளநரின் ஒப்புதலைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அதற்கு ஆதரவளிக்க பா.ம.க தயாராக இருக்கிறது" - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டம்: ``தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது" - அன்புமணி ராமதாஸ்

``ஆளநரின் ஒப்புதலைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அதற்கு ஆதரவளிக்க பா.ம.க தயாராக இருக்கிறது" - அன்புமணி ராமதாஸ்

Published:Updated:
அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. அதைத் தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022 தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

அவசரச் சட்டத்துக்கான கால அவகாசம் நவம்பர் 27-ம் தேதியுடன் முடிந்தது. எனினும், ஆளுநர் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக-வும் கோரிக்கையை முன்வைத்தது.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

இந்த நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், ``ஆன்லைன் சூதாட்டம் என்ற கொடிய அரக்கனின் கோரத் தாண்டவத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர்ப்பலியுடன்தான் விடிகிறது. மதுரை திருமங்கலம் அருகே பொறியியல் கல்லூரியில் படித்துவந்த வினோத்குமார் என்ற மாணவர் நேற்று தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்! வினோத்குமார் டென்னிஸ் வீரர். அவரின் குடும்பமும் அவரின் கனவுகளை நிறைவேற்ற துணை நின்றது. ஆனால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி பணத்தை இழந்ததால் வினோத்குமார் தற்கொலை செய்துகொண்டார்.

சாதிக்கவேண்டியவர்களை சாகடித்துக்கொண்டிருக்கிறது ஆன்லைன் ரம்மி! ஆன்லைன் சூதாட்டம் தடைசெய்யப்பட வேண்டியதுதான் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனாலும் அது இன்னும் தடை செய்யப்படாததால் ஒன்றரை ஆண்டுகளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். அவசரச் சட்டம் காலாவதியான பின்னர் 16 நாள்களில் 6 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளைத் தடுக்கவேண்டிய கடமை அரசுக்கு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவேண்டிய கடமை ஆளநருக்கும் இருக்கிறது.

ஆளுநர் ஆர்.என் ரவி
ஆளுநர் ஆர்.என் ரவி

அதை உணராமல் தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது! ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவிட்டதுடன் கடமை முடிந்துவிட்டதாக நினைத்து அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கக் கூடாது. ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அதற்கு ஆதரவளிக்க பா.ம.க தயாராக இருக்கிறது" எனப் பதிவிட்டிருக்கிறார்.