Published:Updated:

``மனிதனை மனிதன் சுமப்பதால்..!" - தருமபுர ஆதீன நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க கோட்டாட்சியர் தடை

தருமபுர ஆதீனம்

திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து தருமபுரம் ஆதீன மடத்தில் நடைபெறவிருந்த பட்டினப்பிரவேச நிகழ்வில் பல்லக்கு தூக்குவதற்கு அனுமதி மறுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

``மனிதனை மனிதன் சுமப்பதால்..!" - தருமபுர ஆதீன நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க கோட்டாட்சியர் தடை

திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து தருமபுரம் ஆதீன மடத்தில் நடைபெறவிருந்த பட்டினப்பிரவேச நிகழ்வில் பல்லக்கு தூக்குவதற்கு அனுமதி மறுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

Published:Updated:
தருமபுர ஆதீனம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்திருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று `பட்டினப் பிரவேசம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்குத் திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசம் நிகழ்வில் திராவிடர் கழகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி திருவாவடுதுறை ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

தருமபுர ஆதீனம்`
தருமபுர ஆதீனம்`
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருக்கிறார். ``ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் தூக்கினால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால்,

கோட்டாட்சியர் அலுவலகம்
கோட்டாட்சியர் அலுவலகம்

மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் இந்த நிகழ்ச்சியைத் தடை செய்திடக் கோரி அனுப்பிய அறிக்கையின் படியும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23-ன் படி சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதாலும், பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்படுகிறது" எனக் கோட்டாட்சியர் பாலாஜி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism