Published:Updated:

ரூ.9,602 கோடி: தமிழ்நாட்டுக்கான ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை விடுவித்தது மத்திய அரசு!

நிர்மலா சீதாராமன்

தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய ரூ.9,602 கோடி ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுத்திருக்கிறது.

ரூ.9,602 கோடி: தமிழ்நாட்டுக்கான ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை விடுவித்தது மத்திய அரசு!

தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய ரூ.9,602 கோடி ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுத்திருக்கிறது.

Published:Updated:
நிர்மலா சீதாராமன்

மத்திய அரசு மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை முறையாக விடுவிக்கவில்லை எனப் பல்வேறு மாநிலங்களில் நிதியமைச்சர்கள் புகார் தெரிவித்துவந்தனர். அதற்கு, `கொரோனா பேரிடர் உள்ளிட்ட காரணங்களால் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் அதே வரிவருவாய்ப் பற்றாக்குறையை மத்திய அரசுமே எதிர்கொண்டுவருகிறது. அதனால் விரைவில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்' என மத்திய அரசு கூறிவந்தது.

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி

இந்த நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா, அஸ்ஸாம், டெல்லி, கோவா, ஹரியானா உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை ரூ.86.912 கோடியை தற்போது மத்திய அரசு விடுவித்திருக்கிறது. மே 31-ம் தேதிவரை மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய ரூ.9,602 கோடி ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுத்திருக்கிறது. சென்னைக்கு வந்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைவைத்த ஒரே வாரத்துக்குள் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism