Published:Updated:

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் பின்னடைவு... காரணம் என்ன?!

நீட் தேர்வு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 12,840 பேர் தேர்வை எழுதினர். அவர்களில் 4,447 பேர் தேர்ச்சி பெற்றதாக (35 சதவிகிதம்) தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் பின்னடைவு... காரணம் என்ன?!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 12,840 பேர் தேர்வை எழுதினர். அவர்களில் 4,447 பேர் தேர்ச்சி பெற்றதாக (35 சதவிகிதம்) தகவல் வெளியாகியுள்ளது.

Published:Updated:
நீட் தேர்வு

நடப்பாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாட்டிலிருந்து 1,32,167 மாணவர்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 17 லட்சத்து 64,571 பேர் எழுதியிருந்தனர். அதன்படி நீட் தேர்வு முடிவுகளை செப். 7-ம் தேதி நள்ளிரவில் வெளியிட்டது தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ). நாடு முழுவதும் 9,93,069 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

அதாவது, 56.28 சதவிகிதம் மாணவர்கள் மருத்துவம் படிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.06 சதவிகிதம் குறைவாகும். அதன்படி, கடந்த ஆண்டு மருத்துவம் பயில தகுதியாக 108-ஆக இருந்த கட் ஆஃப் மதிப்பெண் தற்போது 93-ஆகக் குறைந்துள்ளது. அதாவது 720 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வில் 12.91 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தாலே மருத்துவம் படிக்க தகுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 12,840 பேர் தேர்வை எழுதினர். அவர்களில் 4,447 பேர் தேர்ச்சிபெற்றதாக (35 சதவிகிதம்) தகவல் வெளியாகியுள்ளது.

நீட்... தொடர்ந்து சரியும் தேர்ச்சி விகிதம்!
நீட்... தொடர்ந்து சரியும் தேர்ச்சி விகிதம்!

அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை 2018-ல் 19,680 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் 22 சதவிகிதம் பேர் மருத்துவம் படிக்கத் தகுதிபெற்றனர். அதேபோல, 2019-ல் 8,132 பேரில் 13.46 சதவிகிதமும், 2020-ல் 7,000 பேரில் 25.83 சதவிகிதமும், 2021-ல் 11,236 பேரில் 24.27 சதவிகிதம் பேரும் மருத்துவம் படிக்க தகுதி பெற்றிருந்தனர். அதன்படி, 2022-ல் 20 சதவிகிதத்துக்கும் குறைவான மாணவர்களே தகுதி பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் சிலரிடம் விசாரித்தோம். ``2020-ம் ஆண்டில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 2019 செப்டம்பரில் தொடங்கப்பட்டு, ஓராண்டுக் காலம் பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால், 2022-ம் ஆண்டு, ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வுக்கு, அதே ஆண்டு ஏப்ரல் மாதம்தான் பயிற்சியே தொடங்கப்பட்டது. அதாவது வெறும் மூன்று மாதங்கள்தான் மாணவர்கள் பயிற்சிபெற்றனர். முறையாகப் பயிற்சி வழங்காமையே தேர்ச்சி விகிதம் சரிந்திருப்பதற்கு முக்கியக் காரணமாகும். அதேபோல, நடப்பாண்டு தேர்வில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்துதான் அதிகப்படியான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இதனால், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களால் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. வரும் ஆண்டுகளிலும் இது போன்ற நிலை தொடர வாய்ப்பு இருக்கிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசு சட்டப் போராட்டம் நடத்திவருகிறது. ஆனால், அதற்கு எப்போது விடிவுகாலம் வரும் என்று தெரியவில்லை. அதுவரை நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்களைத் தயார் செய்யவேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது. எனவே, 2023-ம் ஆண்டு, மே மாதம் நடைபெறவிருக்கும் நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி வழங்க வேண்டும்" என்றனர்.

இது தொடர்பாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், ``கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி முற்றிலும் தடைப்பட்டிருக்கிறது. தற்போது தேர்வு எழுதிய மாணவர்கள், 10, 11 ஆகிய வகுப்புகளை கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாகவே பயின்றனர். இதனால், அவர்களுக்கு நீட் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், வழக்கத்தைவிடவும் குறைவான பயிற்சியையே அரசு கொடுத்திருக்கிறது.

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் பின்னடைவு...  காரணம் என்ன?!

அதன் விளைவாகத்தான் தேர்ச்சி விகிதம் சரிந்திருக்கிறது. அதேபோல, தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான கட் ஆஃப் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துவருகிறது. நீட் தேர்வில் வெறும் 12 சதவிகித மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் பணம் இருந்தால், தனியார் கல்லூரியில் சீட் வாங்கிவிடலாம். `தகுதி, திறமை இருந்தால் மட்டுமே மருத்துவம் படிக்கலாம்’ என்று நீட் தேர்வுக்கு மத்திய அரசு விளக்கம் கொடுத்தது. ஆனால், இந்த கட் ஆஃப் குறைவு தேர்வின் தரத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறது" என்றார்.