Published:Updated:

ஒன் பை டூ: தமிழக அரசு கிராமசபைக் கூட்டம் நடத்தத் தடை விதித்திருப்பது?

கோவை சத்யன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
கோவை சத்யன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

மக்களின் வெறுப்புக்கு மொத்தமாக ஆளாகிவிட்ட தி.மு.க., அவர்களைச் சந்திக்க அச்சப்பட்டே கிராமசபைக் கூட்டத்துக்குத் தடைவிதித்திருக்கிறது

ஒன் பை டூ: தமிழக அரசு கிராமசபைக் கூட்டம் நடத்தத் தடை விதித்திருப்பது?

மக்களின் வெறுப்புக்கு மொத்தமாக ஆளாகிவிட்ட தி.மு.க., அவர்களைச் சந்திக்க அச்சப்பட்டே கிராமசபைக் கூட்டத்துக்குத் தடைவிதித்திருக்கிறது

Published:Updated:
கோவை சத்யன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
கோவை சத்யன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கோவை சத்யன், அ.தி.மு.க.

“அ.தி.மு.க ஆட்சியில் கிராமசபைக் கூட்டம் நடத்தத் தடைவிதித்தபோது எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., தற்போது அதே கொரோனாவைக் காரணம் காட்டித் தடைவிதித்திருப்பது இரட்டை வேடமன்றி வேறென்ன? நகை, பயிர்க்கடன்கள் தள்ளுபடி, வேளாண் பொருள்கள் கொள்முதல், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது என ஒவ்வொரு கட்டத்திலும் மக்களை ஏமாற்றியிருக்கும் தி.மு.க., மக்களையும் உண்மையையும் எதிர்கொள்ள அஞ்சியே கிராமசபைக் கூட்டத்துக்குத் தடைவிதித்திருக்கிறது. சாராயம் விற்று ஆட்சி நடத்துவதா... நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கத் தெரியலையா... எழுவரை விடுதலை செய்ய முடியவில்லையா... எனக் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர். அதோடு, ‘அ.தி.மு.க-வினால்தான் தமிழக உரிமை போச்சு... தமிழர்களின் வாழ்வாதாரம் போச்சு... தமிழ்நாடு கடனில் தத்தளிக்கிறது...’ என்றெல்லாம் எங்களைக் குறைசொல்லிக் கொண்டிருந்த தி.மு.க., இன்று அந்த விவகாரத்திலெல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். தி.மு.க தலைவர் திறம்பட ஆட்சி நடத்தத் தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார். மக்களின் வெறுப்புக்கு மொத்தமாக ஆளாகிவிட்ட தி.மு.க., அவர்களைச் சந்திக்க அச்சப்பட்டே கிராமசபைக் கூட்டத்துக்குத் தடைவிதித்திருக்கிறது!”

ஒன் பை டூ: தமிழக அரசு கிராமசபைக் கூட்டம் நடத்தத் தடை விதித்திருப்பது?
ஒன் பை டூ: தமிழக அரசு கிராமசபைக் கூட்டம் நடத்தத் தடை விதித்திருப்பது?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தி.மு.க.

“மக்கள் பாதுகாப்பு கருதித்தான் இந்தத் தடை. அ.தி.மு.க காலத்தில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தாமல் கபட நாடகம் ஆடினார்கள். ஆனால், மக்கள்நலனில், அவர்களின் சுகாதாரத்தில், ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டிய சூழலை உணர்ந்துதான் கிராமசபைக் கூட்டங்கள் நடத்த, தி.மு.க அரசு தடைவிதித்திருக்கிறது. ‘பொங்கல் பரிசுத்தொகுப்பில் தவறு நடந்திருக்கிறது. அதனால்தான் மக்களைச் சந்திக்க அஞ்சுகிறார்கள்’ என அ.தி.மு.க-வினர் சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது. அந்த விவகாரத்தில் முதல்வரே விசாரித்து, அதற்குக் காரணமான நிறுவனங்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்திருப்பதோடு, ‘நடவடிக்கை தொடரும்’ எனவும் சொல்லியிருக்கிறார். மக்களைச் சந்திக்க எங்களுக்கு என்ன தயக்கம்..? எங்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாள்தோறும் மக்களைச் சந்தித்துவருகிறார்கள். கடந்தகால அ.தி.மு.க ஆட்சியில், அமைச்சர்களாக இருந்த ராஜேந்திர பாலாஜியை கோவில்பட்டியிலும் ஆர்.பி.உதயகுமாரை மதுரையிலும் மக்கள் விரட்டி அடித்தார்களே... அதுபோலத் தற்போதைய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் நடத்தினார்கள் என எங்காவது, ஏதாவது தகவல்கள் இருக்கின்றனவா? கொரோனா தொற்றால் நாள் ஒன்றுக்கு முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், கிராமசபைக் கூட்டம் நடத்துவது முறையாக இருக்காது என்பதை உணர்ந்தே தி.மு.க அரசு தடைவிதித்திருக்கிறது. இது மக்களுக்கு நன்றாகவே புரியும். புரியாமல் இதைவைத்து அரசியல் செய்பவர்களுக்குப் புரியவைக்கவேண்டிய அவசியம் இல்லை!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism