Published:Updated:

``காங்கிரஸில் வளர்ச்சி இருப்பதாலேயே அடிதடி நடக்கிறது” - உட்கட்சி மோதல் குறித்து தனுஷ்கோடி ஆதித்தன்

தனுஷ்கோடி ஆதித்தன் பேட்டி

``சத்தியமூர்த்தி பவனுக்குள் மது போதையில் சென்று பிரச்னை செய்ததன் காரணமாகவே கலவரம் மூண்டுள்ளது. அதை ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் தவிர்த்திருக்க வேண்டும்” என்கிறார், முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன்.

``காங்கிரஸில் வளர்ச்சி இருப்பதாலேயே அடிதடி நடக்கிறது” - உட்கட்சி மோதல் குறித்து தனுஷ்கோடி ஆதித்தன்

``சத்தியமூர்த்தி பவனுக்குள் மது போதையில் சென்று பிரச்னை செய்ததன் காரணமாகவே கலவரம் மூண்டுள்ளது. அதை ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் தவிர்த்திருக்க வேண்டும்” என்கிறார், முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன்.

Published:Updated:
தனுஷ்கோடி ஆதித்தன் பேட்டி

நாட்டின் விடுதலைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர், வ.உ.சிதரமபரனார். அதற்காக தனது சொத்து சுகங்களையும், சொந்த பந்தங்களையும் இழந்தது மட்டுமல்லாமல், ஆங்கிலேய அரசால் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அதை அனுபவித்தவர். சிறையிலே செக்கிழுத்த தியாகச் செம்மலான அவரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

அதையொட்டி, நெல்லையில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள வ.உ.சி சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், ``தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. கட்சிக்குள் ஜனநாயக முறைப்படி நிறைய விஷயங்களைப் பேசித் தீர்த்துக் கொள்கிறோம். அப்படி பேச்சுவார்த்தை மூலமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய விசயத்துக்காக ஏழு பேருந்துகளில் சத்தியமூர்த்தி பவனுக்கு ஆள்களை அழைத்துச் சென்றது தவறானது.

வ.உ.சி சிலைக்கு மரியாதை
வ.உ.சி சிலைக்கு மரியாதை

வெளியூர்களில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கைகலப்பு நடந்திருக்கிறது. அதில், இரு தரப்பினருக்குமே காயம் ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி காரில் ஏறச் சென்றபோது வழிமறித்து அவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதன் காரணமாகவே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்குள் அடியாட்கள் இருந்ததாக ரூபி மனோகரன் சொல்வது தவறான தகவல். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டத் தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியில் செயல்படுகிறது. கட்சியில் வளர்ச்சி இருப்பதாலேயே அடிதடி நடந்திருக்கிறது.

கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்குள் மது போதையில் சென்றவர்களால் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.
தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் மத்திய இணை அமைச்சர்

கட்சி அலுவலகத்துக்கு மது போதையில் சென்றவர்கள் கே.எஸ் அழகிரியிடம் அத்துமீறிப் பேசியதாலே அவரும் ஒருவரைக் கன்னத்தில் அடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.ரூபி மனோகரனுக்கும், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதை இருவரையும் அழைத்துப் பேசி முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தனுஷ்கோடி ஆதித்தன் தெரிவித்தார்.