Published:Updated:

மின் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி., இலவச மின்சாரத்துக்கு மீட்டர்... என்ன நடக்கிறது மின்வாரியத்தில்?!

அமைச்சர் செந்தில் பாலாஜி
News
அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் கட்டண உயர்வு, மின் தடை என்ற சர்ச்சைகளுக்கு இடையே தற்போது மின் கட்டணத்துக்கு மறைமுக ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுவதாகவும் விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கு மீட்டர்கள் பொருத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன...

``மின் இணைப்பு, வளர்ச்சி, ஆரம்ப மின் பயன்பாடு, மின் துண்டிப்பு உள்ளிட்டவற்றுக்குக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது, ஆனால் இதுவரை எந்த கட்டணத்துக்கும் சேவை வரி வசூலிக்கப்படவில்லை. 2017-ம் ஆண்டு ஜூலை 1 முதல் முன் தேதியிட்டு 18 சதவிகித ஜி.எஸ்.டி வசூலிக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்னையில் மவுனமாக இருக்காமல் உடனடியாக தலையிட்டு மின் கட்டணங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி வசூலிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதோடு, நிரந்தரமாக ரத்து செய்யத் தேவையான நடவடிக்கையை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.” என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“தமிழக மக்கள் மின் கட்டணத்தை ஏற்கெனவே அதிக அளவில் செலுத்தி வரும் நிலையில், தற்போது ஜிஎஸ்டி வரியை மறைமுகமாக மின் கட்டணத்தில் சேர்த்திருப்பது மக்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது. இது மின்கட்டண உயர்வுக்கு மிகப் பெரிய அடித்தளமாக அமைந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்துவதால் மின் கட்டணம் அதிகரிப்பதோடு, அதனுடன் ஜி.எஸ்.டி-யும் சேர்த்துள்ளதால், மக்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மின்கட்டணத்துக்காக ஜி.எஸ்.டி வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்வதோடு, இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படையாகச் செயல்படவேண்டும்” என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு அமைந்தது முதல் மின்சாரத்துறைதான் கடுமையான விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வருகிறது. மின் கட்டண உயர்வு, மின் தடை என்ற சர்ச்சைகளுக்கு இடையே தற்போது மின் கட்டணத்துக்கு மறைமுக ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுவதாகவும் விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கு மீட்டர்கள் பொருத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்தப் புகார்களின் உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து விசாரணையில் இறக்கினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் பேசினோம் ``குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பதுபோலத்தான் மின்சாரத்துறையில் நடக்கும் செயல்களையும் அதற்கு அரசு கொடுக்கும் விளக்கத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பொருளாதாரச் சிக்கல் இருக்கிறது என்றால் அதைச் சரி செய்ய ஏழை எளிய மக்கள், குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் நல்ல அரசுக்கு அழகு. மக்களுக்கு எந்த விதத்திலும் சுமையை ஏற்றிவிடக் கூடாது என்பதில்தான் அதிக கவனம் இருக்க வேண்டும். வரி விதிப்பதோ கட்டணங்களை உயர்த்துவதோ அரசு செய்யவே கூடாது. ஆனால், இந்த விடியா அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் பல்வேறு வகையில் சிக்கலைச் சந்தித்து வருகிறார்கள்.

டி.ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர்
டி.ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர்

தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் மின்சாரத்துறை சார்பாக மிகப்பெரிய சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் மின் கட்டணத்துக்கு எந்த வரியும் வசூலிக்கவில்லை. அப்படிச் சொல்வார்களானால் அது தவறான கருத்து” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மின்வாரியத்தில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து மின் பொறியாளர்கள் அமைப்பைச் சேர்ந்த காந்தியிடம் பேசினோம். ``மின்சாரத்துறையில் சேவை சார்ந்த நடைமுறைகளுக்கு அதற்கு ஜி.எஸ்.டி வசூல் செய்வது எப்போதும் இருக்கிறது. மின் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி இல்லை. ஆனால், இப்படி வசூல் செய்வதிலேயே அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ஜி.எஸ்.டி தமிழ்நாடு அரசின் கையில் இல்லை என்பதால் இதில் இவர்கள் ஏதும் செய்ய முடியாது. எல்லா சர்வீஸ்-க்கும் மீட்டர் வைக்க வேண்டும் என்பது அடிப்படை விதியாக இருக்கிறது. 2003-04-லிருந்தே இருக்கிறது. ஆனால், அதை இங்கே செயல்படுத்தாமல் இருக்கிறது. மின்சாரத்துறையில் இப்போது மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டபோது மீட்டர் பொருத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கச் சொல்கிறார்கள்.

காந்தி - முன்னாள் மின்சாரத்துறை பொறியாளர்
காந்தி - முன்னாள் மின்சாரத்துறை பொறியாளர்

ஸ்மார்ட் மீட்டர் வைக்கச் சொல்கிறார்கள். ஆனால், இது எதுவும் தேவையில்லாதது. வெட்டிச் செலவு. மின்சாரத்துறையில் அரசு செயல்படுத்தும் அனைத்தும் மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் கொடுக்காது.” என்றார்.

அரசியல் தலைவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து மின்வாரியச் செயலாளர் ராகேஷ் லக்கானியிடம் கேட்டோம், ``மின் இணைப்பு, பெயர், பிளான் மாற்றங்களுக்கு 2018-லிருந்தே ஜி.எஸ்.டி வசூல் செய்யப்படுகிறது. ஆனால், இந்த நடைமுறை 2020-லிருந்துதான் செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது 2018-லிருந்து பெறப்பட்ட இது போன்ற சேவைகளுக்கு முன் தேதியிட்டு ஜி.எஸ்.டி வசூல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அந்தக் கட்டணத்தை மின் கட்டணத்தோடு சேர்த்து வசூல் செய்வதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. மற்றபடி, மின்சாரக் கட்டணத்துக்கு எப்போதும் ஜி.எஸ்.டி வசூல் செய்யவில்லை. கடந்த பத்து ஆண்டாக விவசாயத்துக்கு என வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் நடைமுறை இருக்கிறது. ஒவ்வொருவரும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கணிக்கவே இந்த மீட்டர்களே தவிர எதிர்காலத்தில் இலவச மின்சாரமே இல்லாமல் போகும் என்ற அச்சம் தேவையில்லாதது. எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்ற கணக்குத் தெரிந்தால்தான் தேவையின் அளவு தெரியும். அப்போதுதான் மின் பற்றாக்குறை ஏற்படாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.

ராஜேஷ் லக்கானி
ராஜேஷ் லக்கானி

‘மாதம் தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை எப்போது செயல்பாட்டுக்கு வரும்?’ எனக் கேட்டபோது “இது குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம்” எனப் பதிலளித்தார். சிக்கல்கள் இல்லாமல் மக்கள் சிரமங்கள் இல்லாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும்!