Published:Updated:

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா: `அடுத்த ஆண்டு இறுதியில் தேர்தல்’ ; டெல்லி உத்தரவு காரணமா?

விஜய் ரூபானி
விஜய் ரூபானி

சமீபத்தில் ராஜினாமா செய்த பாஜக முதல்வர்கள் பட்டியலில் மூன்றாவதாக இணைந்திருக்கிறார் விஜய் ரூபானி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருக்கும் விஜய் ரூபானி, `அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் நான் முதல்வராக நீடிப்பேன்’ என்றும் கூறியிருக்கிறார். அடுத்த வருடம் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அவர் என்ன காரணத்துக்காக ராஜினாமா செய்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும், டெல்லியின் உத்தரவின்பேரிலேயே ராஜினாமா செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜய் ரூபானி
விஜய் ரூபானி

ராஜினாமா செய்த பிறகு பேசிய விஜய் ரூபானி, ``குஜராத்தின் முதல்வராகப் பணியாற்ற, எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்காக பா.ஜ.க-வுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எனது பதவிக் காலத்தில், பிரதமர் மோடியின் தலைமையில் மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பங்காற்றும் வாய்ப்பைப் பெற்றேன்” என்றார்.

Vikatan

திடீர் ராஜினாமா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஐந்து ஆண்டுகளாக முதல்வராகப் பதவி வகித்ததாகவும், பதவியில் நீண்டகாலம் பணியாற்றியிருப்பதாகவும் பதிலளித்தார். மேலும் இது பா.ஜ.க-வில் வழக்கமான நடைமுறைதான் என்றும் கருத்து தெரிவித்தார். தொடர்ந்து பா.ஜ.க தேசியத் தலைவர் உத்தரவின் கீழ் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

எடியூரப்பா
எடியூரப்பா

சமீபத்தில் ராஜினாமா செய்த பாஜக முதல்வர்கள் பட்டியலில் மூன்றாவதாக இணைந்திருக்கிறார் விஜய் ரூபானி. சமீபத்தில் கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பாவும், உத்தரகாண்ட் முதல்வராக இருந்த தீரத் சிங் ராவத்தும் தங்களின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு