Published:Updated:

ஒன் பை டூ: தமிழக ஆளுநர் நியமனத்தில் உள்நோக்கம் இருக்கிறது என்ற கே.எஸ்.அழகிரியின் கருத்து?

கோபண்ணா, ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
கோபண்ணா, ஹெச்.ராஜா

ஆளுநரை வைத்துக்கொண்டு சில முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. அதற்கான, அபாயச் சங்கையே அழகிரி ஊதியிருக்கிறார்.

ஒன் பை டூ: தமிழக ஆளுநர் நியமனத்தில் உள்நோக்கம் இருக்கிறது என்ற கே.எஸ்.அழகிரியின் கருத்து?

ஆளுநரை வைத்துக்கொண்டு சில முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. அதற்கான, அபாயச் சங்கையே அழகிரி ஊதியிருக்கிறார்.

Published:Updated:
கோபண்ணா, ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
கோபண்ணா, ஹெச்.ராஜா

கோபண்ணா, காங்கிரஸ்

“மிகச்சரியான கருத்து. காரணம் ஐ.பி.எஸ் அதிகாரி, புலனாய்வு அமைப்பில் முக்கியப் பொறுப்பு வகித்தவர் என முழுக்க காவல்துறை பின்புலம்கொண்ட ஒருவரை ஆளுநராக நியமித்திருக்கும்போது, இது போன்ற சந்தேகங்கள் எழுவது நியாயமானதுதான். தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோஹித்தை மாற்ற வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இது போன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது. அதன் நீட்சியாகத்தான் இந்த நியமனத்தைப் பார்க்கவேண்டியிருக்கிறது. உதாரணமாக, புதுச்சேரியை எடுத்துக்கொள்ளுங்கள். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட நாராயணசாமி அரசாங்கத்தை, ஆளுநராக இருந்த கிரண் பேடி செயல்படவே விடவில்லை. அங்கே, கட்சிக் கட்டமைப்பே இல்லாமல், மற்ற கட்சியினரை இழுத்து பா.ஜ.க-வினர் அதிகாரத்துக்கும் வந்துவிட்டார்கள். ஆனால், தமிழகத்தில் இதுவரை, பலவித யுக்திகளைக் கையாண்டும் அவர்களால் பெரிய அளவில் வெற்றிபெற முடியவில்லை. அதனால், ஆளுநரை வைத்துக்கொண்டு சில முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. அதற்கான, அபாயச் சங்கையே அழகிரி ஊதியிருக்கிறார். எதிர்காலத்தில் அது போன்ற முயற்சிகளில் ஆளுநர் ஈடுபட்டால், காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயகத்தை விரும்புகிறவர்கள், கட்சிகள், அமைப்புகள் மக்களைத் திரட்டிப் போராடவேண்டிய சூழல் உருவாகும் என்றும் எச்சரித்திருக்கிறார்!’’

ஒன் பை டூ: தமிழக ஆளுநர் நியமனத்தில் உள்நோக்கம் இருக்கிறது என்ற கே.எஸ்.அழகிரியின் கருத்து?
ஒன் பை டூ: தமிழக ஆளுநர் நியமனத்தில் உள்நோக்கம் இருக்கிறது என்ற கே.எஸ்.அழகிரியின் கருத்து?

ஹெச்.ராஜா, பா.ஜ.க

“மிகத் தவறு. அழகிரி ஏன் இப்படிப் பேசியிருக்கிறார் எனத் தெரியவில்லை. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினே, கவர்னருக்கு வாழ்த்து சொல்லி வரவேற்றிருக்கிறார். ஆனால், ஆளுநர் எதைக் கண்டுபிடித்துவிடுவார் என அழகிரி பயப்படுகிறார் என்றும் எனக்குப் பிடிபடவில்லை. கவர்னர் ஆர்.என்.ரவி, நாகாலாந்தில் கிளர்ச்சிகளுக்கு எதிராக மிகச்சிறப்பாகச் செயல்பட்டவர். தமிழகத்துக்கு அவரைப் போன்ற ஆளுமைதான் இன்றைய தேவை. காரணம், இந்தியாவிலேயே தேசவிரோத, பிரிவினைவாத தீய சக்திகள் அதிகமாக இருக்கிற மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. மத்திய அரசாங்கத்தை ‘மத்திய அரசு’ என்றே சொல்லாத அளவுக்கு தீய நோக்கம்கொண்ட கும்பல் ஆட்சியிலிருக்கிறது. இவற்றையெல்லாம் எச்சரிக்கையாகக் கையாளவேண்டிய தேவை இருக்கிறது. அதனால், தமிழ்நாட்டுக்கு ஆளுநராக ஆர்.என் ரவியை நியமித்திருப்பது மிகச் சரியான முடிவு. அவரை நான் வரவேற்கிறேன்...மனதார வாழ்த்துகிறேன்!’’