Published:Updated:

`பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருக்கலாம்!' - சொல்கிறார் ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

``கலப்படமான பொருள்களைக் கொடுத்து ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறது இந்த அரசாங்கம். பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 1,800 கோடி ரூபாயில் 1,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கலாம்!" - ஹெச்.ராஜா.

`பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருக்கலாம்!' - சொல்கிறார் ஹெச்.ராஜா

``கலப்படமான பொருள்களைக் கொடுத்து ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறது இந்த அரசாங்கம். பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 1,800 கோடி ரூபாயில் 1,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கலாம்!" - ஹெச்.ராஜா.

Published:Updated:
ஹெச்.ராஜா

கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற கோயில் நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்போடு ரூ.2,500 பணம் ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் கொடுக்கப்பட்டது.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதை ரூ.5,000-ஆகக் கொடுக்க வேண்டும் என்று இப்போதைய முதல்வர் அன்று கூறினார். ஆனால் இந்தமுறை, நையா பைசா காசு கொடுக்காமல் பொங்கல் பரிசு தொகுப்பை மட்டும் கொடுத்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுவும் மிளகுக்கு பதிலாக இலவம் பஞ்சுக்கொட்டை, மிளகாய்த்தூளுக்கு பதிலாக மரத்தூள், பல்லி, ஊசி சரிஞ்ச் என்ற கலப்படமான பொருள்களைக் கொடுத்து ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறது இந்த அரசாங்கம். பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 1,800 கோடி ரூபாயில் 1,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.

பொங்கல் பரிசு
பொங்கல் பரிசு

மிகப்பெரிய ஊழல் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குடியரசு தின விழா ஊர்தி சர்ச்சை ஒரு நாடகம். கடந்த 2006-ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசுடன், தி.மு.க கூட்டணியில் இருந்தபோதும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தமிழக சிறப்பு ஊர்திகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. மற்ற ஆண்டுகளில் ஏன் அனுமதி கிடைக்கவில்லை? கடந்த சில ஆண்டுகளில் பா.ஜ.க ஆட்சி நடைபெறும் உ.பி அரசின் வாகன ஊர்திக்கும்கூட அனுமதி கிடைக்கவில்லை.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

பொங்கல் தொகுப்புக் கொள்ளையை திசைதிருப்ப, தி.மு.க இந்த நாடகத்தை நடத்துகிறது. வெறுப்பு அரசியல் செய்யாவிடின், இவர்களுக்குத் தூக்கமே வராது. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க துடைத்து எறியப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism