Published:Updated:

பனங்காட்டுப் படை கட்சியிலிருந்து ஹரி நாடார் நீக்கம்! - ராக்கெட் ராஜா அறிவிப்பின் பின்னணி என்ன?

ஹரி நாடார்

சிறையில் அடைக்கப்பட்ட தனக்கு சட்டரீதியான உதவிகளைச் செய்ய கட்சி முன்வரவில்லை என ஹரி நாடார் வருத்தப்பட்டார். அதேசமயம் தன் பெயரைச் சொல்லி ஹரி நாடார் கட்டப்பஞ்சாயத்து செய்வதை ராக்கெட் ராஜா விரும்பவில்லை.

பனங்காட்டுப் படை கட்சியிலிருந்து ஹரி நாடார் நீக்கம்! - ராக்கெட் ராஜா அறிவிப்பின் பின்னணி என்ன?

சிறையில் அடைக்கப்பட்ட தனக்கு சட்டரீதியான உதவிகளைச் செய்ய கட்சி முன்வரவில்லை என ஹரி நாடார் வருத்தப்பட்டார். அதேசமயம் தன் பெயரைச் சொல்லி ஹரி நாடார் கட்டப்பஞ்சாயத்து செய்வதை ராக்கெட் ராஜா விரும்பவில்லை.

Published:Updated:
ஹரி நாடார்

ராக்கெட் ராஜா தலைமையிலான பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர், ஹரி நாடார். நெல்லை மாவட்டம் மேல இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அவர் ராக்கெட் ராஜாவுடன் சேர்ந்த பிறகு ஆளே மாறிப்போனார். கை, கழுத்தில் சிறிது நகையுடன் வலம்வரத் தொடங்கிய அவர் ஒருகட்டத்தில் நகைக்கடையையே உடல் முழுவதும் அணிந்த நிலைக்கு மாறிப்போனார்.

தேர்தலில் வாக்குச் சேகரிப்பு
தேர்தலில் வாக்குச் சேகரிப்பு

2019-ல் நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலின்போது பனங்காட்டுப் படை கட்சியின் சார்பாகக் களமிறங்கிய ஹரி நாடார் 4,243 வாக்குகள் பெற்றார். அதுவே அவரது முதல் தேர்தல். அதன் பின்னர் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக ராக்கெட் ராஜா, ஹெலிகாப்டரில் வந்து பிரசாரம் செய்தார். அதில் 37,724 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசியலில் வலம்வரத் தொடங்கிய ஹரி நாடார், அடுத்ததாக சினிமாவிலும் கால்பதிக்க விரும்பினார். அதனால், தானே கதாநாயகனாக நடிக்க முடிவுசெய்ததுடன், அந்தப் படத்துக்கு பூஜை போட்டு திரையுலகத்தினரிடம் பரபரப்பைக் கிளப்பினார்.

இந்த நிலையில், ஹரி நாடார் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் பண மோசடியில் ஈடுபட்டுவருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ராக்கெட் ராஜாவின் பெயரைப் பயன்படுத்தி சில இடங்களில் மோசடிகளில் ஈடுபடுவதாக எழுந்த புகார் காரணமாக ராக்கெட் ராஜாவுக்கும் ஹரி நாடாருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.

பெங்களூரைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவருக்குக் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கிக் கொடுப்பதாக 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹரி நாடார் மீது பெங்களூரு போலீஸார் வழக்கு பதிவு செய்தார்கள். அந்த வழக்கு தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சீமானுக்கு ஆதரவாக ஹரி நாடார் எனக்குக் கொலை மிரட்டல்விடுத்தார்.
நடிகை விஜயலட்சுமி புகார்

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமிக்கு வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்து உதவிகள் செய்துவந்திருக்கிறார். அதை நடிகை விஜயலட்சுமியே ஒரு வீடியோ பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், சில மாதங்களில் சீமானுக்கு ஆதரவாக விஜயலட்சுமியை மிரட்டியதாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது பதிவுசெய்யப்பட்ட அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது திருவான்மியூர் போலீஸார் அந்த வழக்கை தூசுதட்டி விசாரணையைத் தொடங்கினார்கள். அதில், நடிகை விஜயலட்சுமியை மிரட்டியதற்கான ஆதாரங்கள் இருந்ததால் அந்த வழக்கில் ஹரி நாடாரைக் கைதுசெய்தனர்.

ராக்கெட் ராஜா
ராக்கெட் ராஜா

பெங்களூரு சிறையில் இருந்த அவரைக் கைதுசெய்த போலீஸார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். இந்த நிலையில், பனங்காட்டுப் படை கட்சியிலிருந்து அவரை நீக்குவதாக கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அறிவித்துள்ளார்.

ராக்கெட் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கைக்குழுவின் அறிவுறுத்தல்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஹரி நாடார் நீக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராக்கெட் ராஜா அறிக்கை
ராக்கெட் ராஜா அறிக்கை

ராக்கெட் ராஜாவுக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசியபோது, ``சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று செயல்பட்டுவரும் ராக்கெட் ராஜாவின் பெயரைச் சொல்லி பல இடங்களில் தேவையில்லாமல் ஹரி நாடார் மிரட்டியிருக்கிறார். அவரால் தனக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பிருந்தே அவரை ஒதுக்கியேவைத்திருந்தார். இப்போது கட்சியிலிருந்தும் நீக்கியிருக்கிறார்” என்கிறார்கள்.