Published:Updated:

ஹரியானாவில் கரைசேருமா காங்கிரஸ்?

குமாரி செல்ஜா
பிரீமியம் ஸ்டோரி
குமாரி செல்ஜா

குறுகிய காலத்தில் ஹரியானாவில் வேரூன்றியிருக்கும் பா.ஜ.க-வை எதிர்த்து அரசியல் செய்ய இயலாமல், நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வியிலிருந்து மீளமுடியாமல் மாநில காங்கிரஸ் படாதபாடுபடுகிறது.

ஹரியானாவில் கரைசேருமா காங்கிரஸ்?

குறுகிய காலத்தில் ஹரியானாவில் வேரூன்றியிருக்கும் பா.ஜ.க-வை எதிர்த்து அரசியல் செய்ய இயலாமல், நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வியிலிருந்து மீளமுடியாமல் மாநில காங்கிரஸ் படாதபாடுபடுகிறது.

Published:Updated:
குமாரி செல்ஜா
பிரீமியம் ஸ்டோரி
குமாரி செல்ஜா

ல நடவடிக்கைகள் எடுத்தும் கோஷ்டி மோதல்கள் குறையாததால், 30 ஆண்டுகள் ஹரியானாவை ஆட்சிசெய்திருக்கும் கட்சியான காங்கிரஸ், தற்போது அங்கு கரையேற முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வரும் அக்டோபர் 21-ம் தேதி சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது ஹரியானா. அங்கு ஆளுங்கட்சியான பா.ஜ.க., எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இந்திய தேசிய ஜனதா தளம், ஜனநாயக ஜனதா கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, ஸ்வராஜ் இந்திய கட்சிகள் ஆகியவை தனித்தனியாகப் போட்டியிடுகின்றன.

ஹரியானாவில் கரைசேருமா காங்கிரஸ்?

கடந்த 2009-ம் ஆண்டு வரை நடைபெற்ற பல சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றிபெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தைத் தாண்டிய தில்லை. 2009-லும்கூட பா.ஜ.க இரண்டே இடங்களில்தான் வென்றது. ஆனால், கடந்த 2014 -ம் ஆண்டு தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 47 தொகுதிகளைக் கைப்பற்றி முதல்முறையாக ஆட்சியில் அமர்ந்தது பா.ஜ.க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே சமயம் 1966 முதல் 1977 வரை தொடர்ந்தும், 1982 - 1987, 1991 - 1996 மற்றும் 2005 முதல் 2014 வரை என 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் துவண்டு, இன்று கரையேற முடியாமல் தடுமாறுகிறது. காரணம், கோஷ்டி மோதல்கள். இதை சரிசெய்ய நினைத்த கட்சித் தலைமை, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே மாநிலத் தலைவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புபீந்தர் சிங் ஹூடா கொடுத்த அழுத்தம் காரணமாக, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அஷோக் தன்வாரை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியது. அதேசமயம் பட்டியல் சமூகத்தினரையும் திருப்திப்படுத்த, அந்தச் சமூகத்தின் முக்கிய பிரமுகரான குமாரி செல்ஜாவை மாநிலத் தலைவராக நியமித்தது.

புபீந்தர் சிங் ஹூடாவை சட்டமன்றத் தலைவர் மற்றும் தேர்தல் மேலாண்மைக் குழுத் தலைவர் பதவிகளில் நியமித்தது. இத்தனைக்கு பிறகும் ஹூடா, செல்ஜா, தன்வார் ஆகியோருக்கு இடையே நிலவும் அதிகாரப் போட்டி குறைந்தபாடில்லை. ராகுல் காந்தியால் தலைவராக நியமிக்கப்பட்டவர் தன்வார். சோனியாவின் செல்லப்பிள்ளை செல்ஜா. ஹூடாவும் தலைமைக்கு நெருக்கமானவர். மூவரும் மூன்று திசைகளில் பயணித்தால் என்னதான் செய்வது?

ஹரியானாவில் கரைசேருமா காங்கிரஸ்?

மேற்கண்ட விஷயங்கள் தவிர, வேறு சில பிரச்னைகளும் இருக்கின்றன. ‘மக்கள் நலன் தொடர்பான சில முக்கிய பிரச்னைகளில், இரட்டை வேடம் போடுகிறது காங்கிரஸ்’ என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. பா.ஜ.க முதல்வர் மனோகர்லால் கட்டார், ‘ஹரியானாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அவசியம்’ என்று அறிவித்தார். அதை ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர் ஹூடா, ‘வெளிநாட்டினருக்கு ஹரியானாவில் இடம் இல்லை’ என்று கர்ஜிக்கிறார். அஸ்ஸாமில் தேசிய பதிவேட்டை கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ், ஹரியானாவில் அதை ஆதரிக்கிறது.

இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. ஹரியானாவில் ஜாட் சமூகம் பெரும்பான்மையானது. முன்னாள் முதல்வர்கள் பலர் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸின் பெரும்பாலான தலைவர்கள் ஜாட் சமூகத்தினர்தான். இதனால், இவர்களில் எத்தனை பேர் பட்டியல் சமூகத்தின் செல்ஜா தலைமையின்கீழ் செயல்பட விரும்புவார்கள் என்பதும் கேள்வியே.

எதிர்ப்பக்கம் ‘மிஷன் 75 ப்ளஸ்’ என்ற குறிக்கோளுடன் களத்தில் தனித்து நிற்கிறது பா.ஜ.க. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளையும் அள்ளியது பா.ஜ.க-வுக்கு பலம். எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் பிரிந்து கிடப்பது கூடுதல் பலம். முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் குடும்பச் சண்டையால், இந்திய தேசிய ஜனதா தளம் இரண்டாக உடைந்து கிடப்பதும் பா.ஜ.க-வுக்கு சாதகமான அம்சம்தான்.

காங்கிரஸுக்கு ஒரே ஆறுதலான விஷயம்... இந்திய தேசிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் அஷோக் அரோரா, சுபாஷ் கோயல், பிரதீப் சௌதாரி, ககன்ஜித் சிங் ஆகியோர் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் ஐக்கியமானதுதான். பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸுடன் கூட்டணி சேரலாம் என்கிற பேச்சும் அடிபடுகிறது.

கடைசி நேர நடவடிக்கைகள் காங்கிரஸுக்கு உதவுமா... இல்லை தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பா.ஜ.க ருசிக்குமா என்பதுதான் கேள்வி.

பத்து கேள்விகள்!

காங்கிரஸின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் பத்து கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது, ‘குடிப்பழக்கம்கொண்டவரா?’ என்பதுதான்.

குமாரி செல்ஜா
குமாரி செல்ஜா

கதர் குர்தா அணிபவரா?, காந்திய வழியில் நடப்பவரா ஆகிய கேள்விகளும் விருப்ப மனுவில் கேட்கப்பட்டுள்ளன. ‘சாதி, மதம் அடிப்படையில் பாகுபாடு காட்டாத வராகவும் மதச்சார்பற்றவராகவும் இருக்க வேண்டும். காந்திய வழியில் நடப்பவர்களைத்தான் கட்சி தேடுகிறது’ என்று ட்வீட் செய்துள்ளார் மாநிலத் தலைவர் செல்ஜா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism