Published:Updated:

`உலகத்தில் நடக்காத ஒன்றையா ராகவன் செய்துவிட்டார்?; வீடியோ வெளியிட்டவரைத்தான் கைது செய்யணும்’ -சீமான்

ராகவன்  - சீமான்
ராகவன் - சீமான்

``தனிப்பட்ட முறையில் செய்த ஒன்றை வீடியோவாக எடுத்து வெளியிட்டு, அப்படிச் செய்துவிட்டார், இப்படி நின்றுவிட்டார் என்று சொல்வதையெல்லாம் பார்க்கும்போது, ஒரு கேடுகெட்ட சமூகமாக மாறிவிட்டதோ என்ற பயமே வருகிறது” என்கிறார் சீமான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக பாஜக மாநில முன்னாள் நிர்வாகி கே.டி.ராகவன் குறித்த சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை மறுத்த கே.டி.ராகவன், தனது பதவியிலிருந்தும் ராஜினாமா செய்தார். இந்தநிலையில், கே.டி.ராகவனின் இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ராகவன்
ராகவன்

சென்னை வளசரவாக்கத்திலுள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், இன்று நடைபெற்ற மாயோன் பெருவிழா நிகழ்ச்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ஒரு நிருபர் கே.டி.ராகவன் வீடியோ விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய சீமான், `` இதில் எது அநாகரிகம் என்று நீங்களே பாருங்கள்... அவருடைய ஒப்புதல் இல்லை, அவருடைய அனுமதியும் இல்லை! அவருக்கே தெரியாமல், அவருடைய வீட்டின் படுக்கையறையிலும் கழிவறையிலும் கேமராவை வைத்து வீடியோ எடுத்துவிட்டு வருவதுதான் முதலில் சமூகக் குற்றம்! அதைச் செய்து வெளியிட்டவரைத்தான் முதலில் கைதுசெய்திருக்க வேண்டும். இந்த உலகத்திலேயே எங்கும் நடக்காத ஒன்றை இவர் செய்துவிட்டார் என்பதுபோல காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?" என பதில் கேள்வி எழுப்பினார்.

சீமான்
சீமான்

மேலும், ``சட்டசபையில்வைத்தே ஆபாசப் படங்களெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பொறுப்பில் இருப்பவர்கள் அதையெல்லாம் செய்யக் கூடாது. ஆனால், இவர் தனிப்பட்ட முறையில் செய்த ஒன்றை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு அப்படிச் செய்துவிட்டார், இப்படி நின்றுவிட்டார் என்று சொல்வதையெல்லாம் பார்க்கும்போது, ஒரு கேடுகெட்ட சமூகமாக மாறிவிட்டதோ என்ற பயமே வருகிறது. யார் யாருடன் பேசுகிறார்கள், யார் என்ன பேசுகிறார்கள் என ஒட்டுக்கேட்பது, பதிவுசெய்வது, அதை வெளிவிடுவது.... என்ன சாதித்துவிட போகிறார்கள், என்ன வந்துவிடப் போகிறது?" எனக் காட்டமாக பதிலளித்திருக்கிறார்.

ராகவன் விவகாரம்: `அண்ணாமலையுடன் பேசியதாக சில ஆடியோக்கள்!’ - அடுத்த வீடியோ வெளியிட்ட மதன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு