Published:Updated:

உ.பி: `அந்த 183 என்கவுன்ட்டர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும்!’ - உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உச்ச நீதிமன்றம்

உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மாநிலத்தில் 10,900-க்கும் மேற்பட்ட அதிதீவிர போலீஸ் நடவடிக்கைகள் நடந்திருப்பதாக உத்தரப்பிரதேச காவல்துறையின் தரவுகள் கூறுகின்றன.

Published:Updated:

உ.பி: `அந்த 183 என்கவுன்ட்டர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும்!’ - உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மாநிலத்தில் 10,900-க்கும் மேற்பட்ட அதிதீவிர போலீஸ் நடவடிக்கைகள் நடந்திருப்பதாக உத்தரப்பிரதேச காவல்துறையின் தரவுகள் கூறுகின்றன.

உச்ச நீதிமன்றம்

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை (15-4-2023) அன்று  பிரயாக்ராஜில் அதிக் அகமது, அவரின் சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக்கொண்டிருந்த சமயத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்கள் இருவரையும் கொலைசெய்தது. இதையடுத்து, அந்தக் குற்றவாளிகள் மூவரும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. அவர்கள் 14 நாள்கள் போலீஸ் காவலில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருக்கின்றனர். 

முன்னதாக கேங்ஸ்டராக வலம் வந்த அதிக் அகமது, பிற்காலத்தில் அரசியல்வாதியானவர். இந்த நிலையில், அதிக், அவரின் சகோதரரின் கொலைக்குப் பிறகு, 2017 முதல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை நடந்தேறிய 183 என்கவுன்ட்டர்கள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

வழக்கறிஞர் விஷால் திவாரி, இதை பொதுநல வழக்காகத் தாக்கல் செய்திருக்கிறார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் எனவும்  மனுதாரர் கோரிக்கை வைத்திருக்கிறார். அதோடு அதிக், அவரின் சகோதரரின் கொலை குறித்து விசாரணை நடத்தவும் அவர் கோரியிருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மாநிலத்தில் 10,900-க்கும் மேற்பட்ட அதிதீவிர போலீஸ் நடவடிக்கைகள் நடந்திருப்பதாக உத்தரப்பிரதேச காவல்துறையின் தரவுகள் கூறுகிறது. இந்த நடவடிக்கைகளில், 23,300 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டதாகவும், 5,046 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் காயமடைந்த காவலர்களின் எண்ணிக்கை 1,443. அதோடு 13 காவலர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மார்ச் 2017 முதல் என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்ட 13 காவலர்களில், எட்டு பேர் கான்பூரின் குறுகிய பாதை ஒன்றில் பதுங்கியிருந்த விகாஸ் துபேயின் கும்பலால் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.