Published:Updated:

``என்னைப் பொறுத்தவரை அவர் பாஜக தலைவரல்ல..." - ஜே.பி.நட்டாவுடனான சந்திப்புக்குப் பிறகு ஆனந்த் ஷர்மா

ஆனந்த் ஷர்மா ( ட்விட்டர் )

"பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவை நான் சந்திக்க எனக்கு முழு உரிமையும் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அவர் பா.ஜ.க தலைவர் அல்ல." - ஆனந்த் ஷர்மா

``என்னைப் பொறுத்தவரை அவர் பாஜக தலைவரல்ல..." - ஜே.பி.நட்டாவுடனான சந்திப்புக்குப் பிறகு ஆனந்த் ஷர்மா

"பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவை நான் சந்திக்க எனக்கு முழு உரிமையும் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அவர் பா.ஜ.க தலைவர் அல்ல." - ஆனந்த் ஷர்மா

Published:Updated:
ஆனந்த் ஷர்மா ( ட்விட்டர் )

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ஜி-23 காங்கிரஸ் தலைவர்களின் குழுவின் முக்கிய உறுப்பினர் ஆனந்த் ஷர்மா. இவர், காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் பலமுறை பகிரங்கமாகத் தனது அதிருப்தியை வெளிப்படுத்திவருபவர். இந்த நிலையில், நேற்று மாலை ஆனந்த் ஷர்மா பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து ஆனந்த் ஷர்மா பா.ஜ.க-வில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் ஷர்மா இந்தத் தகவலை மறுத்திருக்கிறார்.

 ஆனந்த் ஷர்மா
ஆனந்த் ஷர்மா
ட்விட்டர்

இது தொடர்பாக அவர், "பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவை நான் சந்திக்க எனக்கு முழு உரிமையும் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அவர் பா.ஜ.க தலைவர் அல்ல. நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்திலிருந்து வருகிறோம். எங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறோம். இதில் எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

நான் அவரைச் சந்திக்க வேண்டுமென்றால், நான் வெளிப்படையாகச் செல்வேன். இது பெரிய விஷயமா என்ன... நான் காங்கிரஸைச் சேர்ந்தவன். அவர் பா.ஜ.க. அவ்வளவுதான். எனக்கும் அவருக்கும் கருத்தியல் வேறுபாடு இருப்பதால், எங்களுக்குள் தனிப்பட்ட பிளவு இருப்பதாக அர்த்தமில்லை. கருத்தியல் எதிர்ப்பாளர்களை நாங்கள் சமூக விரோதிகளாகக் கருத மாட்டோம்” என்று விளக்கமளித்திருக்கிறார்.