Published:Updated:

உக்ரைன்: ``திரும்ப வந்திருப்பது எனது மகன் அல்ல, மோடியின் மகன்” -மீட்புப்பணி குறித்து நெகிழ்ந்த தந்தை

சஞ்சய் பண்டிதா ( ட்விட்டர் )

காஷ்மீரைச் சேர்ந்த சஞ்சய் பண்டிதா, உக்ரைனின் சுமியில் சிக்கித் தவித்த தனது மகனை இந்திய அரசு பத்திரமாக வெளியேற்றியதற்காகப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

உக்ரைன்: ``திரும்ப வந்திருப்பது எனது மகன் அல்ல, மோடியின் மகன்” -மீட்புப்பணி குறித்து நெகிழ்ந்த தந்தை

காஷ்மீரைச் சேர்ந்த சஞ்சய் பண்டிதா, உக்ரைனின் சுமியில் சிக்கித் தவித்த தனது மகனை இந்திய அரசு பத்திரமாக வெளியேற்றியதற்காகப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

Published:Updated:
சஞ்சய் பண்டிதா ( ட்விட்டர் )

ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் அதிபர் நேட்டோவில் இணையப் போவதில்லை என அறிவித்த பிறகும் போரின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றும் நோக்கில், உக்ரைன் நகர் மீது ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்திய அரசாங்கம் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க முனைப்புக் காட்டி வருகிறது.

இந்த நிலையில், வடகிழக்கு உக்ரைனில் உள்ள நகரமான சுமியில் இருந்து வெளியேற்றப்பட்ட 674 பேரை ஏற்றி வந்த மூன்று விமானங்கள், வெள்ளிக்கிழமை டெல்லியில் தரையிறங்கியது. அப்போது தங்கள் குழந்தைகளைப் பார்க்க ஐந்து-ஆறு மணி நேரம் அவருடைய பெற்றோர்கள் காத்திருந்தனர். அந்த மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களை கட்டிப்பிடித்தபடி ஆனந்த் கண்ணீர் வடித்தனர்.

அங்கு வந்திருந்த சஞ்சய் பண்டிதா என்பவர் இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசுகையில் , ``உக்ரைனிலிருந்து திரும்ப வந்திருப்பது என்னுடைய மகன் இல்லை, மோடியின் மகன் என்று தான் கூற வேண்டும். சுமியில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக என்னுடைய மகன் துருவ் திரும்ப வருவார் என்ற நம்பிக்கை இல்லை. தற்போது தனது மகனைப் பத்திரமாக வெளியேற்றிய இந்திய அரசாங்கத்திற்கு நன்றி'' என்றார் நெகிழ்ச்சியாக.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism