Published:Updated:

ஊட்டசத்துப் பொருள்: ஆவினில் வாங்காதது ஏன்? - அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு மா.சுப்பிரமணியன் பதில்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

`கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்துப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தில், அரசின் ஆவின் நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு, தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விட்டிருப்பதால் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.' - அண்ணாமலை

ஊட்டசத்துப் பொருள்: ஆவினில் வாங்காதது ஏன்? - அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு மா.சுப்பிரமணியன் பதில்!

`கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்துப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தில், அரசின் ஆவின் நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு, தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விட்டிருப்பதால் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.' - அண்ணாமலை

Published:Updated:
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

``கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்துப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தில், அரசின் ஆவின் நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு, தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விட்டிருப்பதால் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது" என்ற பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விரிவாக விளக்கமளித்திருக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

அண்ணாமலை குற்றச்சாட்டு:

தமிழ்நாடு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அறிவித்திருந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நேற்றைய (05.06.2022) தினம் பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதில், ``கர்ப்பிணி பெண்களுக்கு `நியூட்ரிசியன் கிட்'டை தமிழ்நாடு அரசு கொடுத்து வருகிறது. அந்த கிட்டில் ஒரு ஹெல்த் மிக்ஸ், ஆவின் நெய், ஒரு துண்டு, அல்பெண்டசோல் மாத்திரை, டேட்ஸ், அயர்ன் டானிக் என எட்டு பொருள்கள் இருக்கும். இந்த கிட் ஆண்டுக்கு 23 லட்சத்து 80 ஆயிரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த தொகுப்பில் என்னென்ன பொருள்களை வைப்பது, என்னென்ன பொருள்களை நீக்குவது என்பது பற்றி அரசின் பொது சுகாதாரத்துறை, மாநில அரசின் திட்டக்குழு கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதியும், 15-ம் தேதியும் கூடி ஆலோசித்தன. பின்னர், மார்ச் 31-ம் தேதி நடந்த கூட்டத்தில் தனியார் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் `Pro Pl' மதர் ஹெல்த் மிக்ஸ் விலை அதிகமாக இருப்பதாகவும், அதற்கு பதிலாக ஆவின் நிறுவன தயாரிப்பை வாங்கவும் முடிவு செய்யப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், அரசின் தலையீடு காரணமாக ஏப்ரல் 8-ம் தேதி மீண்டும் ஒரு அவசர கூட்டத்தை நடத்தி அந்த முடிவை மாற்றி, அதே தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்ய முடிவு செய்திருக்கின்றனர். அந்த நிறுவனம் வேறு எதுவுமில்லை, பொங்கல் தொகுப்பை வழங்கிய அனிதா டெக்ஸ்தான்! இந்த நிறுவனத்துக்குத்தான் ரூ.450 கோடிக்கு டெண்டர் வழங்கப்பட்டிருக்கிறது. ஆவின் பொருளைவிட இந்த நிறுவனத்தின் ஹெல்த் மிக்ஸ் பவுடர் விலை 60 சதவிகிதம் அதிகம். இதனால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டிருகிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

அதேபோல `அயர்ன் சிரப்' வாங்கியதிலும் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது. அரசின் மருந்து சப்ளை நிறுவனத்தில் இதன் விலை ரூ.42 மட்டும்தான். ஆனால் அனிதா டெக்ஸ் நிறுவனத்தினரிடம் ரூ.224 விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.32 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகமொத்தம் இந்த 2 பொருள்கள் கொள்முதலில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது" என குற்றம்சாட்டினார்.

அண்ணாமலை
அண்ணாமலை

மேலும், ``இந்த விவகாரம் குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கவிருக்கிறோம். அரசு நிறுவனமான ஆவினில் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக தனியார் நிறுவனத்திடம் ஒப்புதல் கொடுத்தது ஏன் என்பது பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெளிவுபடுத்த வேண்டும்" என அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மா. சுப்பிரமணியன் பதில்:

இந்த நிலையில், இன்று (06.06.2022) சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாணவர் மன்ற துவக்க விழாவில் கலந்துகொண்ட பின்பு பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தார்.

``அண்ணாமலை கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நேற்றைய தினமே துறையின் சார்பில் விரிவான பதில் அனுப்பப்பட்டுவிட்டது. இந்த திட்டம் கடந்த ஆட்சியில் 2018-ம் ஆண்டே கொண்டுவரப்பட்டு விட்டது. ஆவினுடைய `ஹெல்த் மிக்ஸ்' கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்தை தருமா என்பது கேள்விதான்! காரணம் அது குழந்தைகளுக்கானது. அதுவும் டீ, காஃபி போல பாலில் கலந்து குடிக்கக்கூடிய பொருள்; அது உண்மையிலேயே ஹெல்த் மிக்ஸா என்பதே கேள்விக்குறிதான்! இதை தமிழ்நாட்டில் எந்த தாய்மார்களாவது பயன்படுத்துகிறார்களா என்றால் ஒருத்தரும் இல்லை! ஆக, விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக அதை வாங்கிக் கொடுக்க முடியாது!

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

மேலும், என்னென்ன பொருள்கள் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பதையும் நாங்கள் முடிவுசெய்யவில்லை; கடந்த ஆட்சிக்காலத்திலேயே உயர் அதிகாரிகளும் மருத்துவ நிபுணர்களும் ஆலோசித்து, `மதர் ஹெல்த் மிக்ஸ்' எதைத் தரவேண்டும் என முடிவெடுத்து, WHO பரிந்துரைத்த இந்த ஊட்டச்சத்து பொருளை வாங்கி, வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக தற்போது தனியாரிடமிருந்து நாம் வாங்கக்கூடிய இந்த `Pro Pl' மதர் ஹெல்த் மிக்ஸ் WHO அங்கீகாரம் பெற்றது! அயர்ன், கால்சியம், சோடியம், அயோடின் என 32 ஊட்டச்சத்துப் பொருள்கள் அடங்கிய ஒரு ஹெல்த் மிக்ஸ்!

அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மேலும் முக்கியமாக இதன் வெளி மார்க்கெட் விலை ரூ.588, ஆனால் நாம் டெண்டர் மூலம் கொள்முதல் செய்யும் விலை ரூ. 460! அதேபோல, வெளி மார்க்கெட்டில் அயர்ன் சிரப் விலை ரூ.112, நம்முடைய கொள்முதலில் ரூ.74 தான்! ஆக மிச்சப்படுத்தி லாபத்தில் வாங்கியிருக்கிறோம்! இதைவிடுத்து, ஆவினில் வாங்கியிருக்கலாமே, அரசின் நிதிச்சுமை குறைந்திருக்குமே என்று கூறுவது பொருத்தமாக இருக்காது. மேலும் அவரின் குற்றச்சாட்டில், தமிழ்நாடு அரசின் சார்பில் ஆவினில் வாங்கச்சொல்லி அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். அது முற்றிலும் தவறு!" என விளக்கமளித்தார்.

அவரைத் தொடந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ``முதலில் டெண்டரே ஃபைனலைஸ் பண்ணவில்லை! `ஆப்பிளை ஆரஞ்சுடன் கம்பேர் செய்யக்கூடாது' என ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு; ஆனால் இந்த குற்றச்சாட்டு ஆப்பிளுடன் எலுமிச்சைப் பழத்தை ஒப்பிடுவதைப்போல இருக்கிறது! WHO பரிந்துரைகள்படிதான் நாம் பொருள்களை வாங்கவேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பொருள்களின் Content Difference, Quality Difference, Quantity Difference எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொள்ளாமல் பொதுவாக A-A Comparison செய்வது தவறு! நாம் கொடுக்ககூடிய அயர்ன் சிரப்பில் 32 பொருட்கள் உள்ளன! ஆக, ஆழமாக தரவுகளை ஆராயாமல் பேசப்படுகிறது!" என பதிலளித்தார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மேலும் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்துப்பேசிய DPH (Directorate Of Public Health And Preventive Medicine) அதிகாரிகள், `` இந்த டெண்டரை பொறுத்தவரையில் 2018-ம் ஆண்டு அரசாங்க ஆணை 118-ன் படி போடப்பட்டு, 1.4.2019-ல் விடப்பட்ட Purchase Order அடிப்படையில்தான் இன்றுவரை ஊட்டச்சத்து பொருள்கள் வாங்கப்பட்டு வருகின்றன. இதன் validity முடிவடைந்து விட்டதால், இந்த ஆண்டுக்கான புது டெண்டர் 10.02.2022 அன்று அறிவிக்கப்பப்பட்டது. இவை எல்லாமே Tamil Nadu Tender Transparency Act மற்றும் விதிமுறைகள் படிதான் நடந்துகொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த திட்டத்தின்மூலம், கர்ப்பிணிகளுக்கு வழங்கக்கூடிய எல்லா Ingredients பொருள்களுக்கும் RDA, EAR இருக்கவேண்டும். மேலும், அந்தப் பொருள்கள் ஒவ்வொன்றுக்கும் ICMR Recommended, NIN Recommended-களின் Guidelines பிரகாரம் ஒரு Quantity இருக்கிறது.

சுகாதாரத்துறை அதிகாரிகள்
சுகாதாரத்துறை அதிகாரிகள்

அதனடிப்படையில் நாங்கள் ஆவின் ஜி.எம்-மிடம், `நீங்கள் கூறிய ஆவின் Milk Whitener-ல் RDA, EAR, Recommend செய்த எல்லா பொருள்களும் இருக்கிறதா? இருக்கிறது என்றால் அதை ஒரு Independent lab-ல் Analysis & Verify செய்து Report சமர்ப்பியுங்கள்; அப்போதுதான் அடுத்த கட்டத்துக்கு செல்லமுடியும்' எனக் கூறினோம்! ஆனால், அதற்கு தாமதம் ஆவதால், இப்போது டெண்டரை மூவ் செய்யச் சொல்லியிருக்கிறோம்! இதற்கடுத்து Technical, Financial என அடுத்தடுத்த Stages எல்லாம் இருக்கிறது. இதன் இறுதி முடிவு என்பது அரசு உத்தரவின் பேரில்தான் நடக்கும்!" எனத் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism