‘கொரோனா விஷயத் தில் ஆரம்பத்தில் முதல் நபராக நின்ற அமைச்சர் ஓரங்கட்டப்பட்டது, பிறகு மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தது, ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் ஊழல் என்ற குற்றச்சாட்டுகள்... இப்படி பல கேள்விகள் இருந்தாலும், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மட்டுமே இப்போதைக்குப் பேச முடியும். மற்ற கேள்விகளைத் தவிருங்கள்” என்றபடியே பேட்டியை எதிர்கொண்டார் விஜயபாஸ்கர்.

“வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதைத் தாண்டி, இன்றைக்கு பத்திரிகையாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், சமூகப் பரவல் என்ற நிலைக்கு கொரோனா போய்விட்டதா, உண்மை நிலவரம் என்ன?”

“பத்திரிகையாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதால் பரவல் மூன்றாம் கட்டத்துக்குப் போய்விட்டது என்று சொல்ல முடியாது. யாரிடமிருந்து அவர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பதுதான் முக்கியம். மேன்ஷனில் தங்கியிருந்த ஒரு பத்திரிகையாளருக்கு, கொரோனா தொற்று இருந்தவருடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவர் அலுவலகம் செல்கிறார். அங்கு உள்ளவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. இதை, சமூகப் பரவல் என்று சொல்ல முடியாது.

தினமும் 6,000 பேருக்கு பரிசோதனை செய்கிறோம். அவர்களில் பாசிட்டிவ் என வருவது குறைவுதான். நோய்த்தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்கள், சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள், அதிக மூச்சுத்திணறலுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வருபவர்கள் ஆகியோரைத்தான் பரிசோதனை செய்கிறோம். யாருக்கெல்லாம் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதை, மிகச் சரியாக ‘ஸ்கெட்ச்’ போட்டு பரிசோதனைக்கு உட்படுத்துகிறோம். அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றை நாம் கட்டுப்படுத்தியுள்ளோம். மூன்றாம் கட்டத்துக்கு நாம் போகவில்லை.”

“ஆனால், ‘எட்டு கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில் பரிசோதனைகளை இன்னும் அதிகரிக்க வேண்டும்’ என்று பல தரப்பினரும் சொல்கிறார்களே?”

“பரிசோதனைகளைப் பொறுத்தவரை மக்கள்தொகையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. உலக சுகாதார நிறுவனம், ஐ.சி.எம்.ஆர் என்ன வழிகாட்டல்களைக் கொடுத்துள்ளனவோ அதன்படி நாம் செயல்படுகிறோம். யாருக்கு அறிகுறிகள் உள்ளனவோ, யாருக்கு டிராவல் ஹிஸ்டரி இருக்கிறதோ, யாருக்கு கான்டாக்ட் ஹிஸ்டரி இருக்கிறதோ அவர்களைப் பரிசோதிக் கிறோம். அப்படித்தான் இதுவரை நாம் கொரோனா வைக் கட்டுப்படுத்தியுள்ளோம். இதில், மக்கள்தொகையை ஒப்பிடுவது தேவையற்றது.’’

“கொரோனா நோயாளிகளுக்கு முழுக்க முழுக்க அரசு மருத்துவர்கள்தாம் சிகிச்சை அளித்துவருகிறார்கள். அவர்களின் சேவையை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள், பாரா மெடிக்கல் ஊழியர்கள், கடைநிலை ஊழியர்கள் உட்பட அனைவரும் மிகுந்த அர்ப் பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள். ஊரடங்கு சூழலில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் அவர்கள் கடமையாற்றி வருவது போற்று தலுக் குரியது. அவர்கள் உடல் முழுவதும் பாதுகாப்பு உடை அணிந்து, பல மணி நேரம் தண்ணீர்கூட குடிக்க முடியாத நிலையில் பணியாற்றுவது மிகப்பெரிய தியாகம்.”

“இவ்வளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அரசு மருத்துவர்கள், சில கோரிக்கைகளை முன்வைத்து சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வருமா?”

“நிச்சயமாக அவர்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றுவார்.”

“பரிசோதனைக் கருவிகள் வாங்கியது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துகொண்டிருக்கின்றனவே?”

“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான பரிசோதனைக்கூடங்கள் உள்ளன. முதன்முதலாக இந்தியாவில் கொரோனா வைரஸ் எட்டிப்பார்த்த நேரத்தில், இந்த வைரஸைக் கண்டுபிடிக்கக்கூடிய பரிசோதனைக்கூடம் புனேயில் மட்டும்தான் இருந்தது. தமிழ்நாட்டுக்கு கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பாகவே சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் ஆய்வகம் ஒன்றை ஏற்படுத்தினோம். பிறகு, மத்திய அரசிடம் அனுமதி பெற்று இதுவரை 33 ஆய்வகங்களை ஏற்படுத்தியுள்ளோம். இதனால், இன்றைக்கு ஒரு நாளைக்கு 6,000 - 7,000 பேருக்கு பரிசோதனை செய்கிறோம். இதற்காகவே, பரிசோதனைக்கான அதிநவீன கருவிகளை வரவழைத்துள்ளோம்.”

“இனிமேல்தான் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்களே?”

“வருங்காலத்தில் கொரோனாவின் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை ஆய்வுசெய்வதற்காக டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு விஷயங்கள் பகுப்பாய்வு செய்து நிலைமையை அரசுக்குத் தெரிவித்துவருகிறார்கள்.”

“அனைத்துக் கட்சிகளையும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால்தான், கொரோனாவை முழுமையாக வெல்ல முடியும். இதைச் செய்வதில் அரசுக்குத் தயக்கம் இருக்கிறதா?”

“எந்தத் தயக்கமும் இல்லை. ‘நல்ல ஆலோசனைகளையும் நல்ல கருத்துகளையும் சொல்லுங்கள், வரவேற்கிறோம்’ என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். தமிழகத்தை ஆரோக்கியமான மாநிலமாக மீட்டெடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.”