Published:Updated:

கொரோனா பரவல்: ``தேச நலன் கருதி யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும்" - ராகுலுக்கு மத்திய அரசு கடிதம்

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை

"ராகுல் காந்திக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துவருவதால், இந்த யாத்திரையைக் கண்டு பா.ஜ.க பயப்படுகிறது." - ஆதிர் ரஞ்சன் சௌத்ரி

கொரோனா பரவல்: ``தேச நலன் கருதி யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும்" - ராகுலுக்கு மத்திய அரசு கடிதம்

"ராகுல் காந்திக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துவருவதால், இந்த யாத்திரையைக் கண்டு பா.ஜ.க பயப்படுகிறது." - ஆதிர் ரஞ்சன் சௌத்ரி

Published:Updated:
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை

சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைத் தொடர்ந்து, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது. அதில் ``கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். புதிதாகத் தோன்றுகிற கொரோனா வைரஸ் மரபணுக்களைக் கண்டறிய வேண்டும். கொரோனா தொற்று இருப்பவர்களின் மாதிரிகளைச் சேகரித்து மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு உட்படுத்துவதை தீவிரபடுத்த வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தது.

சீனா - கொரோனா வைரஸ்
சீனா - கொரோனா வைரஸ்
AP

இந்த நிலையில், ராகுல் காந்தி தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரையில் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக மத்திய அரசு ராகுல் காந்திக்கு அனுப்பிய கடிதத்தில், "காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றுவரும் பாரத் ஜோடோ யாத்திரையால் கொரோனா பரவல் அதிகரித்துவிடும் அபாயம் இருக்கிறது. இதனால் யாத்திரையில் செல்பவர்கள் கட்டாயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்தி கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். யாத்திரையில் கலந்துகொள்பவர்கள், கலந்துகொண்ட பின்பும், கலந்துகொள்வதற்கு முன்பும் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்
பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற முடியாவிட்டால், ராகுல் காந்தி தேச நலனைக் கருத்தில் கொண்டு தன் யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும்" என்று கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, இதற்கு காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, ``ராகுல் காந்திக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துவருவதால், இந்த யாத்திரையைக் கண்டு பா.ஜ.க பயப்படுகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.