Published:Updated:

``காங்கிரஸ் கட்சியின் தலைவர் போட்டியில் நானா..?!" - அசோக் கெலாட் விளக்கம்

அசோக் கெலாட்

காங்கிரஸின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட், அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதாகச் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

``காங்கிரஸ் கட்சியின் தலைவர் போட்டியில் நானா..?!" - அசோக் கெலாட் விளக்கம்

காங்கிரஸின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட், அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதாகச் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

Published:Updated:
அசோக் கெலாட்

2019 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தோல்வியடைந்ததையடுத்து அதற்குப் பொறுப்பேற்கும்விதமாக அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததையடுத்து, கட்சியை பலப்படுத்தும்விதமாக கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குரல் கட்சியில் ஒலிக்கத் தொடங்கியது.

ராகுல் காந்தி - சோனியா காந்தி
ராகுல் காந்தி - சோனியா காந்தி

அதற்கான வேலைகளும் தற்போது காங்கிரஸில் நடந்துவருகின்றன. மேலும், அடுத்த மாதத்துக்குள் காங்கிரஸில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட், அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சோனியா காந்தி நேற்று அசோக் கெலாட்டைச் சந்தித்த பிறகே இத்தகைய செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

இந்த நிலையில், இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அசோக் கெலாட், ``இப்படியான ஒரு தகவலை ஊடகங்களின் மூலமாகத்தான் நான் கேள்விப்பட்டேன். தவிர இது பற்றி வேறெதுவும் எனக்குத் தெரியாது. எனக்கென்று ஒதுக்கப்பட்ட என்னுடைய கடமைகளை மட்டுமே நான் செய்துவருகிறேன்" என்றார்.

இதற்கிடையில் காங்கிரஸ் அமைப்புப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், ``தேர்தல் அட்டவணை குறித்த செயற்குழுவின் மெய்நிகர் கூட்டம் வரும் ஞாயிறு அன்று நடைபெறும், அதற்கு சோனியா காந்தி தலைமை வகிப்பார்" என்று தெரிவித்திருக்கிறார்.