Published:Updated:

தூத்துக்குடி: ”நஷ்ட ஈடு கொடுப்பதல்ல நீதி; குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதே நீதி!” - ஹென்றி திபேன்

ஹென்றி திபேன்

“முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிமீதும், அதிகாரிகள்மீதும் கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பது மட்டுமல்ல நீதி. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதுதான் நீதி.” - ஹென்றி திபேன்

Published:Updated:

தூத்துக்குடி: ”நஷ்ட ஈடு கொடுப்பதல்ல நீதி; குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதே நீதி!” - ஹென்றி திபேன்

“முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிமீதும், அதிகாரிகள்மீதும் கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பது மட்டுமல்ல நீதி. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதுதான் நீதி.” - ஹென்றி திபேன்

ஹென்றி திபேன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. நேற்று மாலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர், மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர், `தமிழக அரசு ஸ்டெர்லைட்டை எந்த ஒரு சூழலிலும் இயங்க அனுமதிக்கக் கூடாது; தமிழக அரசு நியமித்த ஒரு நபர் ஆணையமான ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கையின் பரிந்துரைப்படி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான வருவாய் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள்மீது கொலை வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நினைவஞ்சலி நிகழ்வு
நினைவஞ்சலி நிகழ்வு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளுக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்; தூத்துக்குடி மக்கள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை உணர்ந்து தூத்துக்குடியில் இந்த மண்ணையும் மக்களையும், சுற்றுச்சூழலையும் பாதிக்காத தொழிற்சாலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்’ போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர், மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் பேசுகையில், ``ஸ்டெர்லைட் படுகொலை நடந்து ஐந்து ஆண்டுகளாகின்றன. நீதியரசர் அருணா ஜெகதீசனின் அறிக்கையின்படி, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள்தான் இந்தப் படுகொலையை நடத்தியிருக்கிறார்கள் என்று ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.  

ஹென்றி திபேன்
ஹென்றி திபேன்

நீதியரசரின் அறிக்கை வெளியான பிறகுகூட புலனாய்வு நடத்தப்பட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் இந்தப் படுகொலையில் தொடர்புடையவர்கள்மீது எந்த ஒரு நடவடிக்கையையும் தி.மு.க அரசு எடுக்கவில்லை. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும், அதிகாரிகள்மீதும் கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பது மட்டுமல்ல நீதி. குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுப்பதுதான் நீதி.  

இப்படிப்பட்ட நிலைமையில் `மே 22' படுகொலை நடந்த நாளில், எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்திப்பதற்கு ஊர்வலம் நடத்துகிறார். ஸ்டெர்லைட் சம்பவம் வெளியில் வரக் கூடாது. அதன் மூலம் மறுபடியும் கொலை வழக்கு குற்றச்சாட்டு அடிபடும் என்ற காரணத்தால், திசைதிருப்புவதற்காகவேதான் `ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம்’ என்ற நாடகத்தை நடத்தியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமிமீது வழக்கு பதிவுசெய்யாமல் தி.மு.க அரசு தாமதமாக்கிக்கொண்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது.  

பங்கேற்றவர்கள்
பங்கேற்றவர்கள்

ஆதாரங்கள்  இருந்தும், இன்னும் கொலை வழக்கு பதிவுசெய்யாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே, இதை தாமதப்படுத்துவது எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றவாளிகள் வேகமாகக் கைதுசெய்யப்பட்டார்கள். ஆட்சிக்குப் பிரச்னை ஏற்படும் என்ற காரணத்தால்தான் அதில் வேகம் காட்டினார்கள். ஆனால், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இன்னமும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?” என்றார்.