Published:Updated:

`இருசக்கர வாகனத்துக்கு, மாதம் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்!’ - அகிலேஷின் தேர்தல் வாக்குறுதிகள்

அகிலேஷ் யாதவ்

பாஜக தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெளியிட்ட அடுத்த சில மணி நேரங்களில் சமாஜ்வாடி கட்சியும் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளது.

`இருசக்கர வாகனத்துக்கு, மாதம் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்!’ - அகிலேஷின் தேர்தல் வாக்குறுதிகள்

பாஜக தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெளியிட்ட அடுத்த சில மணி நேரங்களில் சமாஜ்வாடி கட்சியும் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளது.

Published:Updated:
அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், நேற்று காலை பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், சமாஜ்வாடியும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் லக்னோவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், கல்வித் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவேன், அனைத்து அரசு வேலைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதும், பெண்களுக்கான கல்வியில் முதுகலை பட்டப்படிப்பு வரை இலவசமாக்குவேன், மேலும், 2025 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகள் பெற்ற கடனில் இருந்து விடுபட்டு வாழ்வில் முன்னேறுவார்கள்.

அகிலேஷ், யோகி
அகிலேஷ், யோகி

இரண்டு ஏக்கருக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச உரங்கள் - இரண்டு சாக்கு டிஏபி அல்லது டை-அம்மோனியாம் பாஸ்பேட் மற்றும் ஐந்து சாக்கு யூரியா வழங்கப்படும். அனைத்து பிபிஎல், அல்லது வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு இலவச எல்.பி.ஜி சிலிண்டர்கள் வழங்கப்படும். இரு சக்கர வாகனம் வைத்திருப்போருக்கு மாதந்தோறும் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம். ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மாதந்தோறும் 6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3 கிலோ சிஎன்ஜி கேஸ் இலவசம். ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

12 ஆம் வகுப்பில் படிக்கும் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் மற்றும் பட்டதாரி படிப்பில் சேருபவர்களுக்கு இலவச இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க-வை போலவே விவசாயிகளின் நீர்ப்பாசன தேவைக்கு இலவச மின்சாரம், MSME (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்) துறையில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் மற்றும் IT துறையில் மேலும் 22 லட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவையும் தேர்தல் வாக்குறுதியில் உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism