Published:Updated:

`ஹிஸ்டரி - கெமிஸ்ட்ரி; எனர்ஜி - சினெர்ஜி!’ - பன்ச் வசனங்கள் மூலம் கவனம் ஈர்த்த மோடி #HowdyModi

2017-ம் ஆண்டு நீங்கள் (ட்ரம்ப்) உங்களின் குடும்பத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தீர்கள். இன்று நான் என் குடும்பத்தை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.

Modi
Modi ( AP )

அமெரிக்காவில் இந்திய - அமெரிக்கர்கள் முன்னிலையில் மோடி உரையாற்றுகிறார் என்ற செய்தியை அறிந்தவர்கள், `மோடி என்ன பேசப்போகிறார்’ என ஆவலுடன் எதிர்நோக்கினர். இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றபின், முதல்முறையாக அமெரிக்கா சென்றிருக்கிறார். டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் `ஹௌடி மோடி’ நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகமாக வாழும் டாப் 10 நகரான ஹூஸ்டனின் என்.ஆர்.ஜி மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இதில் கலந்துகொண்டார். டெக்சாஸ் வாழ் இந்தியர்கள் அமைப்பான டெக்சாஸ் இந்தியா போரம் (Texas India Forum) தான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்திய நேரப்படி சரியாக 8.30 மணி அளவில் நிகழ்ச்சி தொடங்கியது. 50,000-க்கும் அதிகமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Public in Modi event
Public in Modi event

`ஹௌடி மோடி’ என்றால் நலமா மோடி என்று அர்த்தம். சுமார் 90 நிமிடங்கள் கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பல ஆயிரம் கலைஞர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகள் மூலம் பார்வையாளர்களைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர். பின்னர் மோடி மற்றும் ட்ரம்ப் மைதானத்துக்கு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களைப் பார்வையாளர்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

பின்னர் மேடையேறிப் பேச ஆரம்பித்த மோடி, முதலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நன்றியைத் தெரிவித்து தனது பேச்சை தொடங்கினார். மோடி, ``அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எனது நன்றிகள். நண்பர்களே... நலமா? இங்கு இருக்கும் காட்சி நம்பமுடியாத வகையில் இருக்கிறது. டெக்ஸாஸ் எப்போதும் பெரிதாகத்தான் காணப்படும். இன்று டெக்ஸாஸ் மக்களின் உத்வேகம் தெரிகிறது. மக்களின் எண்ணிக்கையை மட்டும் நான் குறிப்பிடவில்லை. நாம் இப்போது இங்கு புதிய வரலாற்றை காண்கிறோம். இது புதிய வரலாறு மட்டும் கிடையாது. புதிய கெமிஸ்ட்ரி.

`ஹிஸ்டரி - கெமிஸ்ட்ரி; எனர்ஜி - சினெர்ஜி!’ - பன்ச் வசனங்கள் மூலம் கவனம் ஈர்த்த மோடி #HowdyModi

இந்த என்.ஆர்.ஜி மைதானத்தில் இருக்கும் எனர்ஜி இந்தியா அமெரிக்க இடையே இருக்கும் சினெர்ஜியைக் காட்டுகிறது.(சினெர்ஜி என்றால் இரண்டு குழுக்கள் அல்லது நிறுவனங்கள் இணைந்து பணியாற்றும்போது கிடைக்கும் வெற்றி அல்லது பலன் என்று பொருள்). 2017-ம் ஆண்டு நீங்கள் (ட்ரம்ப்) உங்களின் குடும்பத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தீர்கள். இன்று நான் என் குடும்பத்தை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். இந்தியா ட்ரம்ப்புடன் நல்ல தொடர்பைக் கொண்டுள்ளது. அவரை நான் முதன்முதலாக சந்தித்தபோது அவர் என்னிடம் இந்தியா வெள்ளை மாளிகைக்கு உண்மையான நண்பன் என்று தெரிவித்தார். இன்று இந்த நிகழ்வில் நீங்கள் கலந்துகொண்டதன் மூலம் அதனை நிரூபித்து காட்டியுள்ளீர்கள்.

'வெள்ளை மாளிகைக்கு உண்மையான நண்பன் இந்தியா'- ஹூஸ்டன் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்!

இங்கு எனக்கு வாழ்த்து சொல்ல வந்திருக்கும் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள், அமெரிக்க அதிபர், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் என அனைவருக்கும் பெரும் சல்யூட். இது 1.3 பில்லியன் இந்தியர்களின் சல்யூட். என்னிடம் நீங்கள் மோடி நலமா என்று கேட்டால், உங்களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான். `இந்தியாவில் எல்லாம் சிறப்பாகச் சென்றுகொண்டு இருக்கிறது’ என்பேன். (இதை மோடி தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் தெரிவித்தார்)

Modi - trump
Modi - trump

நான் சொன்னதைக் கேட்டு அமெரிக்க நண்பர்கள் ஆச்சர்யப்பட்டிருப்பார்கள். எல்லோரும் நலம் என்பதை இந்திய மொழிகளில் சொன்னேன். இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பல்வேறு மொழிகள் பேசபட்டு வருகிறது. மொழிகள் மட்டுமல்ல, பல்வேறு கலாசாரங்கள், பல்வேறு தோற்றங்கள் எனப் பல வேற்றுமைகள் கொண்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே எங்களின் பாரம்பர்யம். அதுவே எங்களின் சிறப்பு. எங்கள் பலம், உத்வேகம் எல்லாம் அதுவே. நாங்கள் எங்கு சென்றாலும், இந்த வேற்றுமை மற்றும் ஜனநாயகத்தை எடுத்துச் செல்வோம்.

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவில் பலர் கலந்து கொண்டனர். 61 கோடி மக்கள் வாக்களித்தனர். அதிகளவில் பெண்கள் வாக்களித்தனர். அதிக பெண் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதெல்லாம் மோடியால் நடந்து விடவில்லை. இவை அனைத்தும் இந்தியர்களால் சாத்தியமானது. இந்தியாவின் அடையாளம் எனப் பொறுமையைச் சொல்வேன். ஆனால், இன்று இந்தியாவின் முன்னேற்றத்துக்காகப் பொறுமையை இழக்கிறோம். நாம் நமக்கு நாமே சவால்களை அளிக்கிறோம். மாற்றத்தை ஏற்படுத்துகிறோம். இங்கு எதுவும் மாறாது எனச் சொன்னவர்களை எதிர்த்து அவர்களுக்கு சவால் அளிக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் 130 கோடி இந்தியர்கள் யாரும் கனவில்கூட நினைக்காத அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளோம்.

Modi
Modi

இன்று, கிராமப்புற சுகாதாரம் என்பது 99 சதவிகிதமாக உள்ளது. சமையல் எரிவாயு இணைப்புகள் 55 சதவிகிதமாக இருந்தன. ஆனால் 5 ஆண்டுகளுக்குள் அதை 95 சதவிகி தமாகக் கொண்டு வந்துள்ளோம். வெறும் 5 ஆண்டுகளில், 15 கோடி மக்களுக்கு எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளோம். தற்பொது இணையம்தான் எல்லாம். டேட்டாதான் புதிய தங்கம் என்கிறார்கள். இந்தியாவில் இணைய சேவை தற்போது குறைந்த விலையில் கிடைக்கிறது.

நாங்கள் ஆர்ட்டிக்கிள் 370-வை முடிவுக்குக் கொண்டு வந்தோம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் உரிமைகளையும் வலர்ச்சியையும் தடுத்தது இந்தச் சட்டம். தீவிரவாதிகளும் பிரிவினைவாதிகளும் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்தனர். தற்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு அனைத்து இந்தியர்களுக்கும் இருக்கும் அதே உரிமை இருக்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இந்தச் சட்டத் திருத்தம் தொடர்பாக விவாதித்தன. மாநிலங்களவையில் எங்களுக்குப் போதிய மெஜாரிட்டி இல்லை என்றாலும் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் ஆர்ட்டிகள் 370 ஐ நீக்கினோம். இதற்காக இந்திய பிரதிநிதிகளுக்கு நீங்கள் எழுந்து நின்று பாராட்டுகளை கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Modi - trump
Modi - trump

இந்தியாவின் இந்த முடிவு, தங்களின் சொந்த நாட்டைக்கூட நிர்வாகிக்க முடியாத சிலருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. அவர்கள் இந்தியர்கள் மீது வெறுப்பை விதைத்தார்கள். அவர்கள் தீவிரவாத்தை ஆதரிப்பார்கள். உங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகுக்கும் தெரியும் அவர்கள் யாரென்று? 9/11 அன்று அமெரிக்காவில் நடந்ததாக இருக்கலாம். அல்லது 26/11-ல் மும்பைல் நடந்த தாக்குதலாக இருக்கலாம். இதற்கு பின்னால் இருந்தவர்கள் எங்கே கண்டுபிடிக்கப்பட்டார்கள்?

பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கும் எதிரான போராட்டத்திற்கான நேரம் வந்துவிட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்பும் அதற்கு எதிராக தான் நிற்கிறார் என்பதை நான் இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவருக்காக நாம் ஒருமுறை எழுந்து நின்று பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்பது 7.3 சதவிகிதமாக இருகிறது. இது இதற்கு முன்னர் இந்த நிலையில் இருந்தது கிடையாது.

Howdy Modi
Howdy Modi

அடுத்த சில நாள்களில் அதிபர் ட்ரம்ப்புடன் நடக்க இருக்கும் பேச்சுவார்தைகளில் சாதகமான முடிவுகள் எட்டப்படும் என நினைக்கிறேன். அவர் என்னைப் பேச்சுவார்த்தைக்கு கடினமானவர் என அழைக்கிறார். நான் அவரை ஒப்பந்த கலையின் மாஸ்டர் என்பேன். உங்களை இந்தியாவுக்கு அழைக்கிறேன். குடும்பத்துடன் வர வேண்டும்” என்று முடித்தார்.