Published:Updated:

தமிழ்நாடு சட்டப்பேரவை: `அண்டை மாநில உறவு முதல் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் வரை!’ - ஆளுநர் உரையின் ஹைலைட்ஸ்

ஆளுநர் ஆர்.என் ரவி
Live Update
ஆளுநர் ஆர்.என் ரவி

நடப்பு ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இன்றைய சட்டப்பேரவை முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

05 Jan 2022 10 AM

ஆளுநர் உரை நிறைவு!

சபாநாயர் அப்பாவு
சபாநாயர் அப்பாவு

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று ஆளுநர் தனது உரையை காலை 10 மணிக்குத் தொடங்கினார். பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், 10:43-க்குத் தனது உரையை நிறைவு செய்தார். தற்பொது சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்துவருகிறார்!

05 Jan 2022 10 AM

``சமத்துவபுரங்கள் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை”

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிவரும் ஆளுநர் ரவி, ``தமிழ்நாட்டிலுள்ள 145 பெரியார் சமத்துவபுரங்கள் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை: `அண்டை மாநில உறவு முதல் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் வரை!’ - ஆளுநர் உரையின் ஹைலைட்ஸ்

தொடர்ந்து பேசிய ஆளுநர், ``தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தும் சிறப்புத் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். 24,344 ஆரம்பப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் அனைவருக்கும் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கோயில் நிலங்களை அரசு மீட்டிருக்கிறது” என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
05 Jan 2022 10 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்!’

சட்டப்பேரவையில் தொடர்ந்து உரையாற்றிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ``மேக்கேதாட்டூவில் அணைகட்ட கர்நாடக அரசை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது” என கேட்டுக்கொண்டார். மேலும், ``தமிழகத்தில் மாநில அரசு இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும்’’ எனவும் தெரிவித்தார்

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

`உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதல் அதிகாரம்!’

ஆளுநர் தனது உரையில், ``இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவதில் தமிழக அரசு முனைப்புடன் உள்ளது. தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நலனைக் காப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன” என்றார்.

05 Jan 2022 10 AM

`அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு...’

ஆளுநர் ரவி, ``கல்வி நிறுவனங்கள் அருகே போதைப்பொருள்கள் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மறுசீரமைக்க தேசியப் பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையில் முழுக்கொள்ளளவு நீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை: `அண்டை மாநில உறவு முதல் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் வரை!’ - ஆளுநர் உரையின் ஹைலைட்ஸ்

அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு இருக்கும். அதேநேரத்தில் நமது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி ஆக்சிஜனும், அத்தியாவசிய மருந்துகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

05 Jan 2022 10 AM

முதல்வருக்கு ஆளுநர் பாராட்டு!

ஆளுநர் தனது உரையில், ``தடுப்பூசிப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி, இரண்டாம் அலையைத் தடுத்த முதல்வர் ஸ்டாலினுக்குப் பாராட்டுகள். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது” என்று ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

ஆளுநர்
ஆளுநர்

மேலும் ``மழை வெள்ளத்தால் சாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் சேதத்தைச் சந்தித்துள்ளன. `நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின்கீழ் விபத்துக்குள்ளான நான்காயிரத்துக்கும் மேற்பட்டோருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது” என்றார்

05 Jan 2022 10 AM

ஆளுநர் உரை... வி.சி.க., அ.தி.மு.க வெளிநடப்பு! 

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தற்போது ஆளுநர் ரவி தமிழ்நாடு ஆளுநராகத் தனது முதல் உரையை வாசித்துவருகிறார். இந்த நிலையில் வி.சி.க உறுப்பினர்கள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

வி.சி.க
வி.சி.க

முன்னதாக ரவிக்குமார் எம்.பி., ``அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய `நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட மசோதாவை’ (The Undergraduate Medical Degree Courses Bill, 2021) குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் எந்தச் சட்டப் பேரவையை அவமதிக்கிறாரோ, அதில் இன்று மேதகு ஆளுநர் உரையாற்ற வருகிறார். சட்டப் பேரவையையும், அவர் ஆளுநர் ஆவதற்கு வழிவகுத்த அரசியலமைப்புச் சட்டத்தையும் இப்படி அவமதிப்பது சரிதானா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதிமுக உறுப்பினர்களும் ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்!

05 Jan 2022 10 AM

தொடங்கியது சட்டப்பேரவைக் கூட்டம்!

ஒவ்வோர் ஆண்டு தொடக்கத்திலும் தமிழக சட்டப்பேரவை கூடும்போது ஆளுநர் உரையாற்றுவது மரபாக இருந்துவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தற்போது ஆளுநர் ரவி தமிழ்நாடு ஆளுநராகத் தனது முதல் உரையை வாசித்துவருகிறார்.

05 Jan 2022 9 AM

சட்டப்பேரவையில் ஸ்டாலின்... அதிமுக ஆலோசனை!

தமிழ்நாடு சட்டப்பேரவை: `அண்டை மாநில உறவு முதல் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் வரை!’ - ஆளுநர் உரையின் ஹைலைட்ஸ்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்றம் கூடவிருக்கும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது சட்டமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்.

05 Jan 2022 7 AM

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழக சட்டப்பேரவை கூடும்போது ஆளுநர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது. முன்னதாக இந்தக் கூட்டத்தொடர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடக்கவிருப்பதாகவும், முதல்முறையாக கேள்வி நேரம் உள்ளிட்ட நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் எனவும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால், ஓமைக்ரான் பரவல் காரணமாக, இந்தக் கூட்டத்தொடரும் சென்னை கலைவாணர் அரங்கிலேயே நடக்கிறது.

கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள்
கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள்

கலைவாணர் அரங்கத்தில் காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல்கூட்டம் என்பதால், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். அதன் பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடராக இருப்பதால், ஆளுநர் உரையில் பல முக்கிய விஷயங்கள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.