பாஜக ஆளும் மாநிலங்கள் தற்போது பொது சிவில் சட்டம் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர். அண்மையில், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங், ``மாநிலத்துக்கான பொது சிவில் சட்டத்தின் வரைவைத் தயாரிக்க உயர் அதிகாரம்கொண்ட நிபுணர்குழு அமைக்கப்படும்'' என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, '' நான் சந்தித்த அனைத்து இஸ்லாமியர்களும் பொது சிவில் சட்டத்தை விரும்புகின்றனர். நாட்டில் சீரான சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்’' என்றார்.

இந்த நிலையில், இது தொடர்பாக அந்த மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் இது குறித்து, ``இமாச்சல பிரதேசத்தில் நாங்கள் விரைவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம். இந்த மாநிலம் மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்டது. இந்தச் சட்டத்தை முஸ்லிம் பெண்கள் வரவேற்பார்கள் என்று நான் நினைக்கிறேன். இது முஸ்லிம் சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிக்காது. இந்தச் சட்டம் அவர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கும்'' என்றார்.
