Published:Updated:

`நீதித்துறைக்கு இது ஒரு சோதனை!' - குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்து என்.ராம்

இப்படி ஒரு சட்டம் கொண்டுவருவதென்றால் நேரம் எடுத்து சரியாக விவாதித்து பல தரப்பு கருத்துகளைக் கேட்டு தயாரித்திருக்கலாம். அதைச் செய்யவில்லை.

என்.ராம்
என்.ராம்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சட்டத் திருத்தம் குறித்து பல்வேறு நபர்கள் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில், மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் இதுதொடர்பாகப் பேசியுள்ளார். அதில், ``இது புத்திசாலித்தனமான மசோதா இல்லை. மிக மோசமான மசோதா. இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவதென்றால் நேரம் எடுத்து சரியாக விவாதித்து பல தரப்பு கருத்துகளைக் கேட்டு தயாரித்திருக்கலாம். அதைச் செய்யவில்லை. மூன்று நான்கு நாள்களில் பார்லிமென்டில் இந்த மசோதா திணிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைப் போராட்டம்
குடியுரிமைப் போராட்டம்
AP

இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது. குடிமக்களுக்கு மட்டுமல்லாது இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும், அகதிகளாக இருந்தாலும் அவர்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று ஆர்டிகிள் 14 சொல்கிறது. தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு ஏன் குடியுரிமை கொடுக்காமல் இருக்கிறீர்கள். குடியுரிமை என்பது மொழி, இனம் என்பதைத் தாண்டி மிக முக்கியமான விஷயம். நீதிமன்றத்தில் இது நிற்காது. நீதித்துறைக்கு இதுஒரு சோதனை" எனப் பேசியுள்ளார். அவரது பேச்சின் முழுத்தொகுப்பை கீழே வீடியோவில் காணவும்!