Published:Updated:

ஸ்டாலின் 'வாபஸ்'... அமித் ஷா 'அந்தர்பல்டி'... - இந்தித் திணிப்பு உள்ளரசியல்!

குறிப்பாக, பி.ஜே.பி ஆளும் கர்நாடகத்தின் எதிர்ப்புதான் எதிலும் பின்வாங்காத அமித் ஷாவை இப்படி பல்டி அடிக்க வைத்துவிட்டதாம். பி.ஜே.பி-க்காரர்களுக்கே இது அதிர்ச்சிதான்."

stalin
stalin

அமித் ஷாவின் இந்தி ஆதரவுப் பேச்சுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்துவிட்டு, ஆளுநரைச் சந்தித்ததும் போராட்டத்தை நிறுத்திவிட்டது, தி.மு.க. என்ன நடந்தது அங்கே? விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2kXWNW7

'ஸ்டாலினைச் சந்திக்க வேண்டும்' என்றுதான் ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. ஆளுநருடன் சந்திப்பு நடந்தபோது 'இந்தியைத் திணிக்கும் எந்தத் திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை. அதற்கு நான் உறுதி தருகிறேன்' என்று சொன்ன ஆளுநர், 'தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக நீங்கள் போராடிக்கொண்டே இருப்பதை, மத்திய அரசும் கவலையோடு பார்க்கிறது' என்றிருக்கிறார்.

துரைமுருகன் வழக்கம்போல நகைச்சுவையாகப் பேசி 'நாங்கள் எதிர்க்க வேண்டிய விஷயங்களை மட்டுமே எதிர்க்கிறோம்' என்று சமாளித்திருக்கிறார். அந்தச் சந்திப்பு நடந்த நேரத்தில்தான், இந்தி குறித்த தனது நிலைப்பாடு தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று அமித் ஷா கருத்து வெளியிட்டார். இந்தச் சூழலில், ''ஸ்டாலினை ஆளுநர் மிரட்டிவிட்டார். அதனால்தான் போராட்டம் வாபஸ்" என்று அ.தி.மு.க-வினர் பேசிக்கொள்கிறார்கள்.

இந்தி விஷயமும் இப்படி பயங்கரமாகப் பற்றிக்கொண்டதால், கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்துள்ளனர் டெல்லி பி.ஜே.பி தலைவர்கள்

அமித் ஷா அந்தர்பல்டி அடித்திருக்கும் நிலையில், ஸ்டாலின் பயந்துவிட்டார் என்றெல்லாம் சொல்வது எந்த அளவுக்கு சரியென்று தெரியவில்லை. இந்தி மொழியும் அகண்ட பாரதமும் ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா. 'அதை இப்போது நிறைவேற்றுங்கள்' என்று நாக்பூர் தலைமை கொடுத்த அழுத்தம், அமித் ஷாவை இந்தி குறித்து அப்படிப் பேசவைத்திருக்கிறது. ஆனால், அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு தென்மாநிலங்களிலிருந்து எழுந்த எதிர்ப்புக்குரல், டெல்லிக்கு நடுக்கத்தை ஏற்படுத்திவிட்டது. குறிப்பாக, பி.ஜே.பி ஆளும் கர்நாடகத்தின் எதிர்ப்புதான் எதிலும் பின்வாங்காத அமித் ஷாவை இப்படி பல்டி அடிக்க வைத்துவிட்டதாம். பி.ஜே.பி-க்காரர்களுக்கே இது அதிர்ச்சிதான்."

அதுமட்டுமல்ல, சமீபகாலமாக பொருளாதார மந்தநிலை பற்றிய பேச்சுகள் கவலை பொங்க விவாதிக்கப்படும் சூழலில், அந்த விஷயத்தை மறக்கடிப்பதுபோலவே புதிது புதிதாக ஏதாவது ஒரு விஷயத்தைத் திட்டமிட்டே பி.ஜே.பி அமைச்சர்கள், தலைவர்கள் எல்லோரும் பேசிவருவது, பூமராங் ஆகிக்கொண்டே இருக்கிறது. இந்தி விஷயமும் இப்படி பயங்கரமாகப் பற்றிக்கொண்டதால், கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்துள்ளனர் டெல்லி பி.ஜே.பி தலைவர்கள். அதனால்தான் மேற்குவங்க முதல்வர் மம்தாவுடன் மோடி, அமித் ஷா சந்திப்பு... மு.க.ஸ்டாலினுடன் கவர்னர் சந்திப்பு என்றெல்லாம் சுமுகமான ஒரு சூழலை உருவாக்கும் வகையில் காட்சிகள் மாற ஆரம்பித்துள்ளன.

ஸ்டாலின் 'வாபஸ்'... அமித் ஷா 'அந்தர்பல்டி'... - இந்தித் திணிப்பு உள்ளரசியல்!

இதனிடையே, பேராசிரியர் அன்பழகன் உடல் நலிவுற்று இருப்பதால், அவர் வகித்துவரும் பொதுச்செயலாளர் பதவிக்கான மாற்று ஏற்பாடு செய்ய தி.மு.க தீவிரம் காட்டி வருகிறது. கட்சியின் சீனியர்கள் சிலர், 'பொதுச்செயலாளரின் அதிகாரங்கள் தலைவரிடமே இருக்கட்டும்' என்று சொல்லியிருக்கின்றனர். வேறு சிலரோ, 'எங்களுக்கு பதவி வேண்டும்' என்று ஸ்டாலினிடம் மல்லுக்கட்ட ஆரம்பித்திருக்கிறார்களாம்.

> யார் யார் போர்க்கொடி தூக்குகிறார்கள்? எப்படியெல்லாம் நெருக்குதல் கொடுக்கிறார்கள்? - தி.மு.க-வின் உள்ளரசியலை விரிவாகச் சொல்லும் ஜூனியர் விகடன் கழுகார் பகுதியை முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: 'ஏலத்தில்' பொதுச்செயலாளர் பதவி... தலைவலியில் 'தளபதி'! https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-general-secretary-post-is-under-auction

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/