Published:Updated:

சிதம்பரம்: நடராஜர் கோயில் ஆய்வு விவகாரம்; பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது இந்து அறநிலையத்துறை!

சிதம்பரம் நடராஜர் கோயில்

``சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுக் கோயில் என்று எங்கள் தரப்பில் சொல்கிறோம். இது பொதுக் கோயில் என்பதுதான் உண்மையான ஒன்று. இந்து சமய அறநிலைய சட்டம் 1959-ன்படி இந்த கோயிலை ஆய்வு செய்ய எங்களுக்கு உரிமை இருக்கிறது." - அறநிலையத்துறை

சிதம்பரம்: நடராஜர் கோயில் ஆய்வு விவகாரம்; பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது இந்து அறநிலையத்துறை!

``சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுக் கோயில் என்று எங்கள் தரப்பில் சொல்கிறோம். இது பொதுக் கோயில் என்பதுதான் உண்மையான ஒன்று. இந்து சமய அறநிலைய சட்டம் 1959-ன்படி இந்த கோயிலை ஆய்வு செய்ய எங்களுக்கு உரிமை இருக்கிறது." - அறநிலையத்துறை

Published:Updated:
சிதம்பரம் நடராஜர் கோயில்

நிர்வாக ரீதியிலான அலுவல் ஆய்வை மேற்கொள்வதற்காக கடந்த 7-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்த குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றனர். அப்போது 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான கோயிலின் கணக்கு வழக்குகள் மற்றும் செலவுகள் குறித்த ஆவணங்களை குழுவினர் கேட்டபோது, அதனை தர மறுத்த தீட்சிதர்கள், இந்து அறநிலையத்துறையால் தங்களை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்துவிட்டனர். அதனால் அன்றைய தினம் திரும்பிச் சென்ற அந்த குழுவினர் உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு மறுநாள் 8-ம் தேதியும் அங்கு ஆய்வுக்குச் சென்றனர். அப்போது மீண்டும் தீட்சிதர்களிடம் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் தங்களின் பொது தீட்சிதர்கள் குழுவின் செயலாளர் இன்று வரவில்லையென்றும், அதனால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்துவிட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

அதையடுத்து சக விசாரணை குழு அதிகாரிகளுடன் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறையின் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், "இந்து அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுப்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள குறைபாடுகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்வதற்காக எங்கள் அதிகாரிகள் குழுவுடன் வந்தோம். இங்கிருக்கும் ஆவணங்களை பார்வையிடவும், அவற்றை எங்களிடம் ஒப்படைக்கவும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டோம். ஆனால் அவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதனால் அடுத்தக்கட்டமாக அதற்குண்டான சட்டப்பூர்வமான நடவடிக்கை என்னவோ அவற்றை மேற்கொள்ள இருக்கிறோம். இந்த இரண்டு நாள்கள் வருகையில் நாங்கள் செய்தது, தீட்சிதர்கள் தரப்பில் ஒத்துழைப்பு கொடுக்காதது அனைத்தையும் ஆணையரிடம் அறிக்கையாக சமர்ப்பிப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிதம்பரம் நடராஜர் பொதுக் கோயில் என்று எங்கள் தரப்பில் சொல்கிறோம். இது பொதுக் கோயில் என்பதுதான் உண்மையான ஒன்று. இந்து சமய அறநிலைய சட்டம் 1959-ன்படி இந்த கோயிலை ஆய்வு செய்ய எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் தீட்சிதர்கள் தரப்பில் அதனை மறுக்கின்றனர். நாங்கள் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட குழு இல்லை என்று தீட்சிதர்கள் தரப்பில் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் சட்ட முறைப்படி இந்து அறநிலையத்துறை ஆணையரால் அமைக்கப்பட்டு, அனுப்பப்பட்டிருக்கும் குழு. அந்த குழுவின் சார்பாக ஆவணங்களை இரண்டு நாள்களாக நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கு அவர்கள் முறையான ஒத்துழைப்பு தரவில்லை. அதனால் சட்டப்படி ஆய்வு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம். தீட்சிதர்கள் தரப்பில் 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி நீதிமன்ற அவமதிப்பு என்று கூறுவது தவறான தகவல். இது தொடர்பான அனைத்து நகர்வுகளையும் சட்டப்பூர்வமாகத்தான் எடுத்திருக்கிறோம்" என்று தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் இந்து அறநிலையத்துறை இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்டிருக்கிறது. இந்து அறநிலையத்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ”கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் சபாநாயகர் திருக்கோவில் குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலைய அறக்கொடைகள் சட்டத்தின் சட்டப்பிரிவு 23 மற்றும் 33-ன் படி அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் திருக்கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வருகின்ற 20.6.2002 மற்றும் 21.06.2022 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை

’துணை ஆணையர்/ஒருங்கிணைப்பாளர்,

விசாரணைக் குழு,

இணை ஆணையர் அலுவலகம்,

இந்து சமய அறநிலையத்துறை,

எண்.8, ஆற்றங்கரை தெரு,

புதுப்பாளையம், கடலூர் – 607 001

என்ற முகவரியில் நேரில் வந்து அளிக்கலாம். அதேபோல 21.06.2022 அன்று மாலை 3 மணிக்குள் அஞ்சல் மூலமாகவும், vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism