Published:Updated:

``திமுக அரசால் இந்துக் கோயில்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன" - ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

``இந்து சமய அறநிலையத்துறை இடங்கள் சூறையாடப்பட்டுவருகின்றன." - ஹெச்.ராஜா

``திமுக அரசால் இந்துக் கோயில்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன" - ஹெச்.ராஜா

``இந்து சமய அறநிலையத்துறை இடங்கள் சூறையாடப்பட்டுவருகின்றன." - ஹெச்.ராஜா

Published:Updated:
ஹெச்.ராஜா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர். செய்தியாளர்களிடம், ``தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலம் ஆகியும் 2,000 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய பரிசீலிப்பதாகக் கூறிவருகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் கோயில்களின் எண்ணிக்கையே தமிழக அரசுக்குத் தெரியவில்லை. நீதிமன்றத் தீர்ப்பில் 44,000 கோயில்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் 36 ஆயிரம் கோயில்கள் இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

``திமுக அரசால் இந்துக் கோயில்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன" - ஹெச்.ராஜா

இந்து சமய அறநிலையத்துறையின் இடங்கள் சூறையாடப்பட்டுவருகின்றன. அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதல்வரின் மகனே தன்னை கிறிஸ்தவன் என்று சொல்கிறார். கிறிஸ்தவர்கள் ஆட்சியாக இருப்பதால், இந்துக் கோயில்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதை வன்மையாகக் கண்டிப்பதோடு, கோயில்கள் அனைத்தையும் இந்து மக்கள் மற்றும் அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இலவசங்கள் வழங்குவதற்கு அதை வழங்காமல் இருக்கலாம். பணமாக மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தினால் பயன்படுத்திக்கொள்வார்கள். எழுதாத பேனாவுக்கு எதுக்கு சிலை... அது வீண்தான்" என்றார்.