Published:Updated:

"இந்த விஷயத்தில் இந்துக்கள் முஸ்லிம்களின் ஃபார்முலாவைப் பின்பற்ற வேண்டும்" - பத்ருதீன் அஜ்மல் எம்.பி

அஸ்ஸாம் எம்.பி மௌலானா பத்ருதீன் அஜ்மல் ( ட்விட்டர் )

``பெற்றோர்களின் அழுத்தம் காரணமாக 40 வயதுக்குப் பிறகு இந்துக்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். 40 வயதுக்குப் பிறகு அவர்கள் குழந்தைகளைப் பெறுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?" - மௌலானா பத்ருதீன் அஜ்மல்

"இந்த விஷயத்தில் இந்துக்கள் முஸ்லிம்களின் ஃபார்முலாவைப் பின்பற்ற வேண்டும்" - பத்ருதீன் அஜ்மல் எம்.பி

``பெற்றோர்களின் அழுத்தம் காரணமாக 40 வயதுக்குப் பிறகு இந்துக்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். 40 வயதுக்குப் பிறகு அவர்கள் குழந்தைகளைப் பெறுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?" - மௌலானா பத்ருதீன் அஜ்மல்

Published:Updated:
அஸ்ஸாம் எம்.பி மௌலானா பத்ருதீன் அஜ்மல் ( ட்விட்டர் )

இந்தியாவில் அதிகரித்துவரும் மக்கள்தொகை, அடுத்த ஆண்டு சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலக அளவில் முதலிடம் பிடிக்கும் என்றும் அண்மையில் ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனால் ஒருபக்கம் மக்கள்தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டுவர வேண்டும் எனப் பலர் கூறிவர, மறுபக்கம் சில தலைவர்கள் மக்கள்தொகை அதிகரிப்புக்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என்றும் கூறுகின்றனர்.

மக்கள்தொகை அதிகரிப்பு
மக்கள்தொகை அதிகரிப்பு

இந்த நிலையில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கட்சியின் தலைவரும், அஸ்ஸாம் மாநில எம்.பி-யுமான மௌலானா பத்ருதீன் அஜ்மல், முஸ்லிம்களைப்போல குறிப்பிட்ட வயதுக்குள் இந்துக்களும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பத்ருதீன் அஜ்மல், ``முஸ்லிம் ஆண்கள் 20-22 வயதில் திருமணம் செய்துகொள்கிறார்கள். அதேபோல் முஸ்லிம் பெண்கள், சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட 18 வயதில் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால்,மறுபுறம் அவர்கள் (இந்துக்கள்) திருமணத்துக்கு முன்னரே சட்டவிரோதமாக இரண்டு, மூன்று மனைவிகளை வைத்துக்கொள்கின்றனர். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், பணத்தைச் சேமிக்கிறார்கள், ஆனால் குழந்தையைப் பெற்றெடுக்க மாட்டார்கள்.

திருமணம்
திருமணம்
சித்திரிப்புப் படம்

பின்னர் பெற்றோர்களின் அழுத்தம் காரணமாக 40 வயதுக்குப் பிறகு அவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். 40 வயதுக்குப் பிறகு அவர்கள் குழந்தைகளைப் பெறுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்... வளமான நிலத்தில் விதை விதைத்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும். அப்போதுதான் வளர்ச்சியும் இருக்கும். எனவே, அவர்களும் முஸ்லிம்களின் ஃபார்முலாவைப் பின்பற்றி, தங்களின் மகன்களுக்கு 20-22 வயதிலும், மகள்களுக்கு 18-20 வயதிலும் திருமணம் செய்துவைக்க வேண்டும். பிறகு எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்று பாருங்கள்" என்று கூறினார். பத்ருதீன் அஜ்மலின் இத்தகைய பேச்சு தற்போது பலரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.