Published:Updated:

`சனாதன தர்மத்தைக் காக்க இந்துக்கள் நிறைய குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்!' - சத்யதேவானந்த் சரஸ்வதி

சத்யதேவானந்த் சரஸ்வதி

`நாட்டில் அதிகரித்துவரும் முஸ்லிம் மக்கள்தொகை, இந்துக்களின் வீழ்ச்சியைக் குறிக்கிறது' என இமாச்சலப் பிரதேச அகில பாரதிய சந்த் பரிஷத்தின் பொறுப்பாளர் யதி சத்யதேவானந்த் சரஸ்வதி கூறியுள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்திluள்ள முபாரக்பூரில், `அகில பாரதிய சந்த் பரிஷத்' என்ற அமைப்பின் சார்பில் மூன்று நாள் விழாவாக 'தரம் சன்சத்' எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த அமைப்பின் பொறுப்பாளர் யதி சத்யதேவானந்த் சரஸ்வதியின் பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இந்த நிகச்சியில் பேசிய சத்யதேவானந்த் சரஸ்வதி, ``இந்து சமூகம் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. அதிகரித்துவரும் முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரிப்பு இந்துக்களின் வீழ்ச்சியைக் குறிக்கிறது. எனவே, இந்துக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தை வலுப்படுத்த வேண்டும். மனிதநேயம் மற்றும் இந்து சனாதன தர்மத்தைப் பாதுகாக்க, நிறைய குழந்தைகளை இந்துக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

சத்யதேவானந்த் சரஸ்வதி
சத்யதேவானந்த் சரஸ்வதி

இவரைத் தொடர்ந்து பேசிய யதி நரசிங்கானந்த சரஸ்வதி என்பவர், ``துர்காஷ்டமி நாளில் ஊர்வலம் செல்லும் மக்கள்மீது கல்வீச்சு மற்றும் தாக்குதல்கள் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்து சமுதாயத்துக்கு இதைவிட துரதிஷ்டம் வேறு என்ன இருக்க முடியும்" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism