Published:Updated:

பிளவுபட்ட அரசியல் கட்சிகளின் வரலாறு... ஒரு ரீவைண்ட்

நெடுஞ்செழியன், வைகோ, டி.ராஜேந்தர்
பிரீமியம் ஸ்டோரி
நெடுஞ்செழியன், வைகோ, டி.ராஜேந்தர்

தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சசிகலாவின் சகோதரர் திவாகரன், `அண்ணா திராவிடர் கழகம்’ என்ற கட்சியையும் தொடங்கினார்.

பிளவுபட்ட அரசியல் கட்சிகளின் வரலாறு... ஒரு ரீவைண்ட்

தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சசிகலாவின் சகோதரர் திவாகரன், `அண்ணா திராவிடர் கழகம்’ என்ற கட்சியையும் தொடங்கினார்.

Published:Updated:
நெடுஞ்செழியன், வைகோ, டி.ராஜேந்தர்
பிரீமியம் ஸ்டோரி
நெடுஞ்செழியன், வைகோ, டி.ராஜேந்தர்

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் உடைந்திருக்கிறது அ.தி.மு.க. கருத்து வேறுபாடுகளால் ஒரு கட்சியிலிருந்து நீங்கிச் செல்வது அல்லது நீக்கப்படுவது காலங்காலமாக நடைபெறும் ஒன்று. அப்படிப் பிரிந்து சென்றவர்கள் உதிரிகளாக மாற்றுக்கட்சிக்கு தாவுவதும், காணாமல்போவதும் நிகழும். ஆனால், தாய்க்கட்சியிலிருந்து ஒரு மாபெரும் கூட்டத்தையே கவர்ந்து, தனிக்கட்சி ஆரம்பித்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் வெகுசிலரே. அப்படிப் பிரிந்துவந்து தாய்க்கட்சிக்கே போட்டியாக மாறியவர்களையும், தடயமே இல்லாமல் கரைந்துபோனவர்களையும் பற்றிய சுருக்கமான ரீவைண்ட் இது!

தி.மு.க-விலிருந்து பிரிந்தவர்கள்... ஈ.வெ.கி.சம்பத், த.தே.க:

1961-ல் ‘திராவிட நாடு’ கொள்கை தொடர்பாக அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்ற ஈ.வெ.கி.சம்பத், `தமிழ்த் தேசியக் கட்சி’ என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். அடுத்தடுத்த தேர்தல் தோல்வியால், 1964-ல் தன் சித்தாந்தங்களுக்கு நேர் எதிரான காங்கிரஸுடன் இணைந்து... கரைந்துபோனது த.தே.க!

எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க: 1972-ல் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கும், பொருளாளர்

எம்.ஜி.ஆருக்கும் இடையே மோதல் வலுக்க, கட்சியைவிட்டே நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். அதைத் தொடர்ந்து, 1972-ல் `அண்ணா தி.மு.க’ என்ற தனிக்கட்சியைத் தொடங்கி 1977ல் முதல்வரானார். 1987-ல் தான் இறக்கும் வரை தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியில் இருந்தார்.

நாவலர் நெடுஞ்செழியன், மக்கள் தி.மு.க:

1977-ம் ஆண்டு தி.மு.க-விலிருந்து பிரிந்த நாவலர் நெடுஞ்செழியன், `மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் கட்சியைத் தொடங்கினார். அதன்பிறகு கட்சியை அ.தி.மு.க-வில் இணைத்தார்.

வைகோ, ம.தி.மு.க:

`விடுதலைப் புலிகளுடன் தொடர்பிலிருக்கும் வைகோவால் கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து’ என்று மத்திய உளவுத்துறை போட்ட ‘நோட்’டால், ரெண்டுபட்டது தி.மு.க. 9 மாவட்டச் செயலாளர்கள், 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் 1994-ம் ஆண்டு `மறுமலர்ச்சி தி.மு.க’ என்ற கட்சியைத் தொடங்கினார் வைகோ.

பிளவுபட்ட அரசியல் கட்சிகளின் வரலாறு... ஒரு ரீவைண்ட்

டி.ராஜேந்தர், ல.தி.மு.க:

1991-ல் தி.மு.க-விலிருந்து பிரிந்து, `தாயக மறுமலர்ச்சிக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கிய டி.ராஜேந்தர், சில ஆண்டுகளில் தாய்க்கழகத்தில் இணைந்தார். 2004-ல் மீண்டும் தி.மு.க-விலிருந்து விலகி, `லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார்.

அ.தி.மு.க-விலிருந்து பிரிந்தவர்கள்...

எஸ்.டி.எஸ்., நமது கழகம்:

1984-ல் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரம், `நமது கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பின்னர், 1987-ல் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

திருநாவுக்கரசர், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க:

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வை ஜெயலலிதா கைப்பற்ற உறுதுணையாக இருந்த திருநாவுக்கரசர், 1990-ல் ஜெயலலிதாவுடன் முரண்பட்டு, ‘அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழக’த்தைத் தொடங்கினார். 1996-ல் மீண்டும் அ.தி.மு.க-வில் சேர்க்கப்பட்டு நீக்கப்பட்டபோது, எம்.ஜி.ஆர் அ.தி.மு.க தொடங்கியவர், பிறகு தேசிய நீரோட்டத்தில் ஐக்கியமானார்.

ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர் கழகம்:

1995-ல் ‘பாட்ஷா’ பட விழாவில், ‘தமிழ்நாட்டில் வன்முறை கலாசாரம் பெருகிவிட்டது’ என்ற ரஜினியின் பேச்சுக்கு எதிர்வினையாற்றாததால், அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன். `எம்.ஜி.ஆர் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார்.

பிளவுபட்ட அரசியல் கட்சிகளின் வரலாறு... ஒரு ரீவைண்ட்

பாக்யராஜ், எம்.ஜி.ஆர். ம.மு.க:

எம்.ஜி.ஆரால், தனது திரையுலக வாரிசு எனப் புகழப்பட்ட நடிகர் பாக்யராஜ், அ.தி.மு.க-விலிருந்து விலகி `எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். பிறகு அது காணாமல்போய்விட்டது.

டி.டி.வி.தினகரன், அ.ம.மு.க:

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்-ஸிடமிருந்து அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதாகக் கூறி, 2018-ம் ஆண்டு `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் டி.டி.வி.தினகரன். 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய இந்தக் கட்சி, காலப்போக்கில் வீரியத்தை இழந்தது.

பிளவுபட்ட அரசியல் கட்சிகளின் வரலாறு... ஒரு ரீவைண்ட்

தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சசிகலாவின் சகோதரர் திவாகரன், `அண்ணா திராவிடர் கழகம்’ என்ற கட்சியையும் தொடங்கினார். பிறகு சசிகலாவின்(!) அ.தி.மு.க-வுடன் அந்தக் கட்சி இணைந்தது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, `எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ என்ற கட்சியையும், அவருடைய கணவர் மாதவன் `எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியையும் தொடங்கிய கூத்தும் நடந்தது.

இந்தப் பெரிய கட்சிகளைத் தவிர்த்து, பல சிறிய கட்சிகளிலும் பிளவுகள் ஏற்பட்டிருக்கின்றன.பா.ம.க-விலிருந்து விலகிய ஜான் பாண்டியன் `தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியையும், பண்ருட்டி வேல்முருகன், `தமிழக வாழ்வுரிமைக் கட்சி’யையும், பேராசிரியர் தீரன் `தமிழ் பா.ம.க’ என்ற கட்சியையும் தொடங்கினர். தற்போது மீண்டும் பா.ம.க-விலேயே ஐக்கியமாகிவிட்டார் தீரன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காங்கிரஸிலிருந்து பிரிந்தவர்கள்...

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தமிழகத் தலைவர்கள் கட்சி தொடங்கியிருக்கின்றனர்.

1950-களின் பிற்பகுதியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி `உழவர் உழைப்பாளர் கட்சி’யையும், எம்.ஏ. மாணிக்கவேலு நாயக்கர் `காமன்வீல்’ கட்சியையும் தொடங்கினர். 1952-ம் ஆண்டு தேர்தலில் இரண்டு பேரும் கூட்டணி அமைத்துப் போட்டியிட உழைப்பாளர் கட்சி 19 சட்டமன்ற இடங்களையும், காமன்வீல் கட்சி 6 இடங்களையும் வென்றன. அதன் பிறகு இரண்டு கட்சிகளும் மீண்டும் காங்கிரஸுடன் இணைந்து கரைந்துபோயின.

பிளவுபட்ட அரசியல் கட்சிகளின் வரலாறு... ஒரு ரீவைண்ட்

1959-ல் ஜவஹர்லால் நேருவின் சோஷலிசக் கொள்கையிலிருந்து மாறுபட்ட ராஜாஜி சுதந்திரா கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சி 1967-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 6 இடங்கள் உட்பட 44 இடங்களைக் கைப்பற்றியது.

1961-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகர் சிவாஜி கணேசன், 1987-ல் காங்கிரஸிலிருந்து விலகி `தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற கட்சியைத் தொடங்கினார். பிறகு அது ஜனதா தளத்துடன் இணைந்தது.

பிளவுபட்ட அரசியல் கட்சிகளின் வரலாறு... ஒரு ரீவைண்ட்

1996 சட்டமன்றத் தேர்தலில், `இந்திய தேசிய காங்கிரஸ் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும்’ என்ற நரசிம்ம ராவின் அறிவிப்பை எதிர்த்து, மாநிலத் தலைவர் ஜி.கே.மூப்பனார் `தமிழ் மாநில காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பிறகு அந்தக் கட்சி காங்கிரஸோடு சேர்ந்தது. 2014-ல் காங்கிரஸிலிருந்து விலகிய ஜி.கே.வாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மறு தொடக்கம் செய்து நடத்துகிறார்.

பிளவுபட்ட அரசியல் கட்சிகளின் வரலாறு... ஒரு ரீவைண்ட்

இவை தவிர, `காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ்’ என்ற கட்சியை குமரி அனந்தனும், `தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ்’ என்ற கட்சியை பழ.நெடுமாறனும், `தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ்’ எனும் பெயரில் வாழப்பாடி ராமமூர்த்தியும், `காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை’ எனும் பெயரில் ப.சிதம்பரமும் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தனிக்கட்சி கண்டதும், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் ஐக்கியமானதும் சிலர் தனித்தனி அமைப்புகளாகப் பிரிந்து சென்றதும் நிகழ்ந்திருக்கின்றன.

இ.யூ.மு.லீக், தே.மு.தி.க., ஃபார்வர்டு பிளாக், வி.சி.க., ச.ம.க (சரத்குமார்), நா.ம.க (கார்த்திக்), கொங்குநாடு முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் போன்ற கட்சிகளும்கூட உடைந்திருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களையும் சேர்த்தால், அந்த எண்ணிக்கை கணக்கில் அடங்காது!