Published:Updated:

அமித் ஷாவைச் சந்தித்துப் பேசிய ஜூனியர் என்.டி.ஆர்! - இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படங்கள்

அமித் ஷா ( ட்விட்டர் )

மத்திய உள்துறை அமைச்சர் அந்தத் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக நேற்றைய தினம் ஹைதராபாத்துக்கு வந்திருந்தார். அப்போது அவரை, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சந்தித்துப் பேசினார்.

தெலங்கானா மாநிலம், முனுகோட் சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால் ரெட்டி தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அதனால், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்தத் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக நேற்றைய தினம் ஹைதராபாத் வந்திருந்தார். அப்போது அமித் ஷாவை, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சந்தித்துப் பேசினார்.

அமித் ஷா
அமித் ஷா
ட்விட்டர்

இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், ``மிகத் திறமையான நடிகரும், நமது தெலுங்கு சினிமாவின் ரத்தினமுமான ஜூனியர் என்.டி.ஆருடனான சந்திப்பு நல்லபடியாக அமைந்தது'' எனப் பதிவிட்டிருக்கிறார்.

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் சமீபத்தில் நடித்த `ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்கு உலக அளவில் பாராட்டுகள் கிடைத்தன. இருவரின் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகின்றன.