Published:Updated:

``மருத்துவம், பொறியியல் பாடத்திட்டங்களை தமிழில் அமைக்க வேண்டும்" - சென்னையில் அமித் ஷா

அமித் ஷா

``தமிழ் மொழியின் மேன்மை வெறும் தமிழர்களுக்கு மட்டும் பெருமையான விஷயம் அல்ல. மொத்த இந்தியாவுக்குமான பெருமை." - அமித் ஷா

``மருத்துவம், பொறியியல் பாடத்திட்டங்களை தமிழில் அமைக்க வேண்டும்" - சென்னையில் அமித் ஷா

``தமிழ் மொழியின் மேன்மை வெறும் தமிழர்களுக்கு மட்டும் பெருமையான விஷயம் அல்ல. மொத்த இந்தியாவுக்குமான பெருமை." - அமித் ஷா

Published:Updated:
அமித் ஷா

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்தியா சிமெண்ட்ஸ்-ன் நிறுவனர் என்.சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட முக்கிய நபர்கள் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

அமித் ஷா
அமித் ஷா

நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமித் ஷா, ``தமிழகத்தில் ரூ.1,456 கோடி செலவில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தமிழக அரசுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி. உலகின் மிக மூத்த மொழி. இன்னும் சொல்லப்போனால் உலகின் மிக மூத்த தொன்மையான, பழமையான இலக்கியம் தமிழ் இலக்கியம். தமிழ் மொழியின் மேன்மை வெறும் தமிழர்களுக்கு மட்டும் பெருமையான விஷயம் அல்ல. மொத்த இந்தியாவுக்குமான பெருமை. அதனால் நான் தமிழக அரசுக்கு வைக்கின்ற வேண்டுகோள் என்னவென்றால், மருத்துவக் கல்வியையும், பொறியியல் கல்வியையும் தமிழ் மொழியிலேயே தமிழ் மாணவர்களுக்குத் தர வேண்டும்.

அமித் ஷா
அமித் ஷா

பல மாநிலங்களில் அவர்களின் சொந்த தாய் மொழியில் மருத்துவ கல்வியையும், பொறியியல் கல்வியையும் மாற்றிவிட்டார்கள். பொறியியல் கல்லூரிகளில் 1,350 மாணவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலத்தில் பாடம் எடுக்கும்போது புரியாது. அதனால் தமிழ் மொழியிலேயே அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் மிக எளிமையாகப் படிப்பார்கள். ஆராய்ச்சிகள் செய்ய முடியும். மருத்துவம், பொறியியல் ஆராய்ச்சிகள் வளரும். ஆகவே, தமிழ் மொழியிலேயே மருத்துவம் பொறியியல் கல்லூரிகளுக்கான பாடத்திட்டங்களை அமைக்கும்படி தமிழக அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறினார்.