Published:Updated:

``காவல் படையில் நவீன தொழில்நுட்பங்களுடன் தேசபக்தியும் அர்ப்பணிப்பும் அவசியம்!" - அமித் ஷா

அமித் ஷா

``காவல் படைகளில் நவீன நுட்பங்களுடன் தேசபக்தி, உடற்தகுதி, சுய அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை வளர்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது." - அமித் ஷா

``காவல் படையில் நவீன தொழில்நுட்பங்களுடன் தேசபக்தியும் அர்ப்பணிப்பும் அவசியம்!" - அமித் ஷா

``காவல் படைகளில் நவீன நுட்பங்களுடன் தேசபக்தி, உடற்தகுதி, சுய அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை வளர்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது." - அமித் ஷா

Published:Updated:
அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``காவல் படைப் பயிற்சியில், தொழில்நுட்பம் மற்றும் நவீன உபகரணங்களின் பயன்பாடு என்பது காலத்தின் தேவை" என்று கூறியிருக்கிறார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய காவல் பயிற்சி நிறுவனங்களின் ஆய்வுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மற்றும் மத்திய காவல் பயிற்சி நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

போலீஸ்
போலீஸ்
மாதிரிப் புகைப்படம்

இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிப் பேசிய அமித் ஷா, ``காவல் படை பயிற்சியில், தொழில்நுட்பம் மற்றும் நவீன உபகரணங்களின் பயன்பாடு என்பது காலத்தின் தேவை. அதே சமயம், அடிப்படைக் காவல் பணிகளில் கவனம் செலுத்தி அதை நடைமுறைப்படுத்தவும் வேண்டும். மேலும் காவல்துறையினரின் பயிற்சி, காலப்போக்கில் மாற்றப்பட வேண்டும் என்பதும் மிக முக்கியமான ஒன்று.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமித் ஷா
அமித் ஷா

காவல் படைகளில், நவீன நுட்பங்களுடன் தேசபக்தி, உடற்தகுதி, சுய அர்ப்பணிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றையும் வளர்க்கவேண்டியது அவசியமாக இருக்கிறது. பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட 'மிஷன் கர்மயோகி' திட்டத்தின் கீழ், கான்ஸ்டபிள், சப் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி வரையில், காவலர்களுக்கான பயிற்சி என்பது முழுமையான அணுகுமுறையுடன் நடத்தப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல், அனைத்து காவலர்களுக்கும் 60 சதவிகித பயிற்சி பொதுவானதாக இருக்க வேண்டும். அதே சமயம், 40 சதவிகித பயிற்சிகள் அந்தந்தப் படைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.