Published:Updated:

குஜராத் விபத்து: மோடி வருகைக்காகப் புதுப்பிக்கப்படும் மருத்துவமனை - சாடும் எதிர்க்கட்சிகள்

வர்ணம் பூசப்படும் மோர்பி நகர் அரசு மருத்துவமனை

``பாலம் விபத்தில் 142 பேர் இறந்துவிட்டனர், நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. ஆனால், பா.ஜ.க-வினர் போட்டோஷூட்டுக்குத் தயாராகும் பணியில் மும்முரமாக இருக்கின்றனர்." - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

குஜராத் மாநிலம், மோர்பி நகரில் ஓடும் மச்சு ஆற்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 141 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. பலரைத் தேடும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மீட்கப்பட்டவர்கள், மோர்பி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில், விபத்து நடந்த மறுநாள், குஜராத்திலுள்ள பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி அதைத் தொடந்து நடந்த நிகழ்ச்சியில்,"ஒருபுறம் வலி நிறைந்த இதயமாக இருந்தாலும், மறுபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது" எனப் பேசினார். மேலும், இன்று மோர்பி நகருக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவிருக்கிறார்.

குஜராத் மோர்பி நகர் அரசு மருத்துவமனைக்கு பிரதமர் வருவதையொட்டி அவசர அவசரமாக அந்த மருத்துவமனை சீர்செய்யப்பட்டுவருகிறது. அங்குள்ள இடர்ப்பாடுகளை நீக்கியும், கழிவறைகளைச் சரிசெய்தும் வருகின்றனராம். இதையடுத்து, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

இது தொடர்பாக ஆம் ஆத்மி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில், ``பாலம் அறுந்து விழுந்ததில் 141 பேர் இறந்துவிட்டனர், நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. உண்மையான குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஆனால், பா.ஜ.க-வினர் போட்டோஷூட்டுக்குத் தயாராகும் பணியில் மும்முரமாக இருக்கின்றனர்" எனப் பதிவிட்டிருக்கிறது.

வர்ணம் பூசப்படும் மோர்பி நகர் அரசு மருத்துவமனை
வர்ணம் பூசப்படும் மோர்பி நகர் அரசு மருத்துவமனை
ட்விட்டர்

காங்கிரஸும் ட்விட்டரில் சில படங்களைப் பகிர்ந்து, ``பிரதமர் மோடியின் வருகையையொட்டி, மருத்துமனையில் வர்ணம் பூசப்பட்டுவருகிறது. இந்த விபத்தில் நிறைய மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், இவர்களோ ஏதோ நிகழ்ச்சிக்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வெட்கமே இல்லை" என்று விமர்சித்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது ,"ராஜ்கோட்டிலிருந்து மருத்துவமனையைச் சுத்தம் செய்வதற்காக அழைத்து வரப்பட்டிருக்கிறோம். பிரதமர் வருகையை முன்னிட்டு மருத்துவமனை முழுவதும் துப்புரவுப் பணியாளர்களால் நிரம்பி வழிகின்றனர். புதிய தண்ணீர் குளிரூட்டிகள், மருத்துவமனை படுக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன" எனத் தெரிவித்தனர்.