Published:Updated:

மருத்துவர் டு தீவிரவாதி... டாக்டர் பாம் தப்பியதும் மீண்டும் பிடிபட்டதும் எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி  அன்சாரி
மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி அன்சாரி

டாக்டருக்கு படித்து வந்த அன்சாரி, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சையத் அப்துல் கரீம் துண்டா என்பவரால் ஈர்க்கப்பட்டு தீவிரவாதியாக மாறினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

1993-ம் ஆண்டு, மும்பை நகரம் ரத்த வெள்ளத்தில் தத்தளித்தது. தொடர் குண்டு வெடிப்புகளால் 314 பேர் பலியாகினர். சுமார் 1,400 பேர் படுகாயமுற்றனர். தாவூத் இப்ராஹிம் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்தாலும், அன்சாரி என்பவர்தான் குண்டுவெடிப்பு திட்டத்தை நிகழ்த்தியவர். ராஜ்தானி ரயில், கான்பூர் மற்றும் கோட்டா போன்ற இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளிலும் இவருக்கு தொடர்பு உள்ளது. மொத்தம் 52 குண்டுவெடிப்புகளில் அன்சாரிக்கு தொடர்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. மும்பை அக்ரிபாடா பகுதியைச் சேர்ந்த அன்சாரி டாக்டருக்குப் படித்துக் கொண்டிருந்தபோது தீவிரவாதியாக மாறியவர்.

மும்பை குண்டுவெடிப்பு
மும்பை குண்டுவெடிப்பு

மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான இவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் சிறையில் அடைப்பட்டிருந்த அவர் சமீபத்தில் 21 நாள்கள் பரோலில் மும்பையில் உள்ள அவரின் வீட்டுக்கு வந்தார். விதிமுறைகளின்படி தினமும் காலை 10.30 மணி மற்றும் நள்ளிரவு 12 மணிக்கு அக்ரிபாடா போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும். ஆனால், வெள்ளிக்கிழமை கையொப்பமிட அன்சாரி வரவில்லை.

தந்தை வீட்டுக்குத் திரும்பாததால் பயந்துபோன அன்சாரியின் மகன் ஜாயித் அன்சாரி தன் தந்தையைக் காணவில்லை என்று அக்ரிபாடா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், ``இன்று அதிகாலை எழுந்த என் தந்தை தொழுகை செய்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் திரும்பி வரவில்லை'' என்று கூறப்பட்டிருந்தது. அதற்குள், அன்சாரி மும்பையில் இருந்து தப்பிவிட்டார். இதையடுத்து மகராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநில அதிரடி போலீஸார் அன்சாரியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு, போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.

மும்பை
மும்பை

உத்தரப்பிரதேச மாநிலம் சாந்த்கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள அமர்தோவா என்ற கிராமம்தான் அன்சாரியின் சொந்த ஊர். இங்கிருந்து நேபாளத்துக்குத் தப்பிச் செல்வது எளிது. இதனால், நேபாள எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மும்பையில் இருந்து லக்னோ வரும் ரயில்கள் கண்காணிக்கப்பட்டன. இந்த நிலையில், ஃபெயித்புல்கஞ்ச் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அன்சாரியை அதிரடிப்படையினர் கைது செய்தனர். அவரிடத்தில் இருந்து ரூ.47.000 ரொக்கம் மற்றும் மொபைல் போன், பாக்கெட் டைரி, ஆதார் அட்டை ஆகியவை கைப்பற்றப்பட்டன. தற்போது, உத்தரப்பிரதேச மாநில போலீஸார் அவரிடத்தில் விசாரித்து வருகின்றனர்.

`ஆஸ்திரேலியாவின் தேவை இதுதான்!’- களத்தில் ரோஹித்துடன் நடந்த உரையாடலைப் பகிர்ந்த கோலி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மும்பை, மாலேகான், புனா, ஆஜ்மீர் உள்ளிட்ட நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் இவருக்குத் தொடர்பு உள்ளது. டாக்டருக்கு படித்து வந்த அன்சாரி, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சையத் அப்துல் கரீம் துண்டா என்பவரால் ஈர்க்கப்பட்டு தீவிரவாதியாக மாறினார். இந்த துண்டா வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் திறமையானவர். அவரைப் போலவே அன்சாரியும் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

மும்பை குண்டு  வெடிப்பு சம்பவம்
மும்பை குண்டு வெடிப்பு சம்பவம்

இதனால், இவரை டாக்டர். பாம் என்று பெயர் வைத்து தீவிரவாதிகள் அழைத்துள்ளனர். 1992- ம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்ற அன்சாரி அங்கு செயல்பட்டு வந்த `ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி' என்ற தீவிரவாத அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றார். பின்னர், 1992-ம் ஆண்டு வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்புகள் நடக்க முக்கிய காரணமாக இருந்தார். இந்தியாவில் உள்ள தடை செய்யயப்பட்ட சிமி அமைப்பு, இந்தியன் முஜாகிதின் அமைப்புகளுக்கும் இவர் வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது அன்சாரிக்கு 60 வயதாகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு