Published:Updated:

கள்ளக்குறிச்சி மாணவி சிசிடிவி காட்சி வெளியானது எப்படி?! - அதிகாரிகள் தீவிர விசாரணை

கலவரம் | தனியார் பள்ளி

``உயிரிழந்த மாணவி ஸ்டடி டைம் முடிந்து அவரின் அறைக்கு மேலே போவதிலிருந்து, காலை மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லும் வரை உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையிடம் கொடுத்துவிட்டோம். எல்லா கேமராக்களும் ஆன் கண்டிஷனில்தான் இருந்தன."

கள்ளக்குறிச்சி மாணவி சிசிடிவி காட்சி வெளியானது எப்படி?! - அதிகாரிகள் தீவிர விசாரணை

``உயிரிழந்த மாணவி ஸ்டடி டைம் முடிந்து அவரின் அறைக்கு மேலே போவதிலிருந்து, காலை மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லும் வரை உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையிடம் கொடுத்துவிட்டோம். எல்லா கேமராக்களும் ஆன் கண்டிஷனில்தான் இருந்தன."

Published:Updated:
கலவரம் | தனியார் பள்ளி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கணியாமூரிலுள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமாக இறந்தார். இதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. மாணவியின் மரணம் தொடர்பாகப் பள்ளித் தாளாளர், இரண்டு ஆசிரியைகள் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர். பள்ளி வாகனங்களுக்குத் தீவைத்து வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 329 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 15-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சின்ன சேலம் கலவரம்
சின்ன சேலம் கலவரம்

வன்முறையால் பாதிக்கப்பட்ட பள்ளியில் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்துவந்தனர். வன்முறை காரணமாக இந்தப் பள்ளி இயல்புநிலைக்குத் திரும்ப, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் எனச் சொல்கிறார்கள். அதுவரை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்த நிலையில், ஜூலை 13-ம் தேதி காலை பள்ளி வளாகத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் பரவிய நிலையில். ஜூலை 12-ம் தேதி இரவு 9:30 மணிக்கு மாணவி படிப்பறையிலிருந்து வெளியே வரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. மாணவி இரவே உயிரிழந்தாரா அல்லது காலையில் உயிரிழந்தாரா என்கிற குழப்பத்துக்கு விடை உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகும்போது தெரியும் என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

அதற்கு முன்பு, ‘உயிரிழந்த மாணவி ஸ்டடி டைம் முடிந்து அவரின் அறைக்கு மேலே போவதிலிருந்து, காலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வரை உள்ள சிசிடிவி காட்சிகளைக் காவல் துறையிடம் கொடுத்துவிட்டோம். இதில் எல்லா கேமராக்களும் ஆன் கண்டிஷனில்தான் இருந்தன. அதிலிருந்து கிடைத்த எல்லா ஃபுட்டேஜையும் காவல்துறையில் கொடுத்துவிட்டோம்’ என்று பள்ளியின் செயலாளர் சாந்தி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் தொடர்புகொண்டபோது, ``பள்ளியின் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. அதற்கு ஒரு சிறு விளக்கமாக இந்தக் காட்சியைப் பள்ளித் தரப்பில் வெளியிட்இருப்பதாகச் சொல்கிறார்கள். இப்போது சி.பி.சி.ஐ.டி மற்றும் சிறப்பு அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்திவருகின்றனர். அந்த விசாரணைக்குப் பிறகே முழு விவரம் தெரியவரும்” என்கிறார்கள்.