Published:Updated:

`ஒதுங்கிச் சென்றவருக்கு அடித்த ஜாக்பாட்!’ - கனிமொழி தேர்வுக்குக் கைகொடுத்தவர் யார்?

கட்சியின் சீனியர்கள் பலரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துவிடலாம் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் கட்சியின் தலைமை, டாக்டர் கனிமொழியையும் நாமக்கல் ராஜேஸ்குமாரையும் வேட்பாளராக அறிவித்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில், டாக்டர்கனிமொழி, ராஜேஸ்குமார் இருவரையும் வேட்பாளர்களாக அறிவித்திருக்கிற கட்சியின் தலைமை. இருவர் நியமனத்துக்குப் பின்னால் நடந்த அரசியல்தான் இப்போது திமுக-வில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தமிழகத்தில் காலியாக இருந்த மூன்று ராஜ்யசபா இடங்களில் ஏற்கெனவே ஓர் இடத்துக்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. திமுக சார்பில் அப்துல்லா என்பவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மீதமிருந்த இரண்டு இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த இரண்டு இடங்களையும் திமுக-வே கைப்பற்றும் நிலை இருப்பதால், திமுக தரப்பிலேயே வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடிக்க போட்டி நிலவியது.

அந்தக் கட்சியின் சீனியர்கள் பலரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துவிடலாம் என்று எதிர்பார்த்துவந்த நிலையில், அந்தக் கட்சியின் தலைமை டாக்டர்கனிமொழி, நாமக்கல் ராஜேஸ்குமார் இருவரையும் வேட்பாளராக அறிவித்தது. இந்தத் தேர்வு சரியா, தவறா என்கிற விவாதங்கள் கட்சிக்குள் நடந்துவரும் நிலையில், வேட்பாளர்களில் ஒருவரான கனிமொழியின் நியமனம் திமுக- வின் மூத்த நிர்வாகிகளுக்கே ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறது.

கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் - டாக்டர் கனிமொழி
கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் - டாக்டர் கனிமொழி

இது குறித்து அறிவலாயத்துக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவரிடம் நாம் கேட்டபோது, ``கனிமொழியின் பெயர் பட்டியலில் இருப்பது கடைசியில்தான் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கே தெரிந்தது. கனிமொழியின் தாத்தா, திமுக-வை ஆரம்பித்த ஐவரில் ஒருவர். கனிமொழியின் தந்தையும் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அந்த அடிப்படையில்தான் கனிமொழிக்கு 2011, 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் தலைவர் கலைஞரால் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இரண்டு தேர்தல்களிலும் அவர் தோல்வியைத் தழுவினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கனவான அமைச்சர் பதவி; எம்.பி வேட்பாளராக்கிய `திருமதி முதன்மை’ - ராஜேஸ்குமார் தேர்வானது எப்படி?

அதன் பிறகு கடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால், ஐபேக் நிறுவனம் அவரால் வெற்றிபெற முடியாது என்று சொல்லிவிட்டது. கட்சியில் பெரிதாக எந்தச் செயல்பாடும் இல்லாமல் இருந்ததால், அவரை நிறுத்த தலைவர் தரப்பும் விரும்பவில்லை. சீட் கிடைக்காத விரக்தியில் அறிவாலயம் பக்கம்கூட வருவதைச் சமீபகாலமாக அவர் தவிர்த்துவந்தார்.

இந்தநிலையில், ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அந்த சீட்டைக் குறிவைத்து மீண்டும் காய்நகர்த்தியிருக்கிறார். அவருடைய அப்பா சோமுவின் நண்பரான துரைமுருகனை இந்த முறை தனது சீட்டுக்கு சிபாரிசு செய்யச் சொல்லியிருக்கிறார் கனிமொழி. தலைமையிடம் பெரிதாக எந்தக் கோரிக்கையும் வைக்காத துரைமுருகன், கனிமொழிக்காகப் பரிந்து பேசியதும் ஸ்டாலினும் அதற்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறார். அதன்பிறகே வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டிருக்கிறது” என்கிறார்கள்.

முதலவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன்
முதலவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன்

மற்றொருபுறம் திமுக-வில் இவருக்கு சீட் வழங்கியதில் அதிருப்தியும் நிலவுகிறது. கட்சிக்காகத் தொடர்ந்து பணியாற்றிவந்தவர்களும், கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற தங்க தமிழ்ச்செல்வன், பையா கவுண்டர், சிவசேனாதிபதி உள்ளிட்டவர்களும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த முறை அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர்களும் கடும் வேதனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

`அண்ணி' அரசியல்... இணையும் கரங்கள்... தகிக்கும் நாமக்கல் தி.மு.க!

அதேபோல் உதயநிதிக்கு நெருக்கமான ராஜேஸ்குமாருக்கு சீட் வழங்கப்பட்டதிலும் புகைச்சல் எழுந்திருக்கிறது. ஏற்கெனவே அந்த மாவட்டத்தில் மட்டுமல்லாமல், கொங்குமண்டலத்தில் அவர் தனி ஆவர்த்தனம் செய்துவருகிறார். கட்சியின் சீனியர்களுக்குக்கூட அவர் மரியாதை தருவதில்லை் என்கிற குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதும் அறிவாலயத்துக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு