Published:Updated:

செக்போஸ்ட்டில் தப்பிக்கவிட்ட போலீஸ் - செக்கிங்கில் தப்பி, சேஸிங்கில் சிக்கிய ராஜேந்திர பாலாஜி!

ராஜேந்திர பாலாஜி
News
ராஜேந்திர பாலாஜி

நேற்று இரவு செக்போஸ்ட்டில் ஒழுங்காக செக்கிங் செய்திருந்தாலே இந்த சேஸிங் அளவுக்கு விவகாரம் சென்றிருக்காது

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பத்தொன்பது நாள்களாக காவல்துறை தேடி அலைந்து ஒருவழியாக இன்று கைதுசெய்திருக்கிறது. இந்தக் கைதுக்குப் பின்னால் நடந்த சேஸிங்தான் இப்போது காவல்துறைக்குள் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

கைது
கைது

ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவானது விருதுநகர் காவல்துறையில். அதனால் இந்த வழக்கு விசாரணை தென் மண்டல ஐ.ஜி அன்பு மேற்பார்வையில் ஆரம்பத்தில் நடந்துவந்தது. தனி டீம் அமைக்கப்பட்டதெல்லாம் ஒருபுறம் நடந்துவந்த வேளையில், ராஜேந்திர பாலாஜி கர்நாடகா அல்லது கேரளாவுக்குள் என்ட்ரியாகியிருப்பார் என்று காவல்துறைக்குத் தகவல் வர, மேற்கு மண்டல காவல்துறையும் இந்த விவகாரத்தில் உள்ளே நுழைந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரண்டு மண்டல காவல்துறைகளும் ராஜேந்திர பாலாஜியை வலைவீசித் தேடிவந்த நிலையில், ராஜேந்திர பாலாஜிக்கு தமிழ்நாட்டுக்குள்ளும், அண்டை மாநிலங்களுக்குள்ளும் மாறி மாறி விசிட் அடித்துவந்தார். அவரை ஒவ்வொரு முறையும் காவல்துறை நெருங்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஒரு செக்போஸ்ட்டில் ராஜேந்திர பாலாஜி கடந்து செல்வதாகத் தகவல் வந்திருக்கிறது. உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள அனைத்து செக்போஸ்ட்களுமே உஷார் செய்யப்பட்டன.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ஆனால், கர்நாடக மாநில எல்லையை ஒட்டிய ஒரு செக்போஸ்ட்டில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் தலைமையில் இருந்த காவல்துறையினர் டீம் ராஜேந்திர பாலாஜி வந்த காரை சோதனையிடாமல் கடந்து செல்ல அனுமதியளித்துள்ளனர். இந்தத் தகவல் வெளியே கசிந்ததும், ஐ.ஜி அன்பு அமைத்த ஸ்பெஷல் டீம், கர்நாடக மாநிலத்துக்குள் ராஜேந்திர பாலாஜி சென்ற காரின் விவரங்களை ஆராய்ந்து நேற்று இரவிலிருந்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் ராஜேந்திர பாலாஜியை நெருங்கிய பிறகு, தமிழக காவல்துறை மேலிடத்துக்குத் தகவல் சொல்லியிருக்கிறது. கார் நம்பர், அதில் பயணம் செய்பவர்களின் விவரங்கள் எல்லாவற்றையும் முன்கூட்டியே தமிழக காவல்துறையிடம் தெரிவித்த பிறகே ராஜேந்திர பாலாஜி சென்ற வழியில் மடக்கி இந்தக் கைது நடந்துள்ளது. நேற்று இரவு செக்போஸ்ட்டில் ஒழுங்காக செக்கிங் செய்திருந்தாலே சேஸிங் அளவுக்கு இந்த விவகாரம் சென்றிருக்காது என்று வருத்தப்படுகிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.