Published:Updated:

என்ன ஆனது `கருத்தொற்றுமை'? - பி.ஜே.பி-யின் விஷன் 2004 Vs மிஷன் 2019 #VikatanOriginals

தற்போதைய பி.ஜே.பி.யின் அணுகுமுறைக்கும், 2004-ல் அந்தக் கட்சியின் அணுகுமுறைக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. இன்றைக்கு இந்த எல்லா முடிவுகளுக்கும் பெருமளவில் அக்கட்சி எதிர்ப்பைச் சந்திக்கவும், இந்த அணுகுமுறை மாற்றமும் ஒரு காரணம்.

`விஷன் 2004' வெளியிடும் நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு
`விஷன் 2004' வெளியிடும் நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு

முத்தலாக் மசோதா, சட்டப்பிரிவு 370, என்.ஆர்.சி, குடியுரிமை சட்டத்திருத்தம், அடுத்து வரத் தயாராகும் பொதுசிவில் சட்டம் என சிறுபான்மையினர் தொடர்பான விவகாரங்களில் அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் வகையில் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது பி.ஜே.பி. ``இதில் பல விஷயங்கள் நாங்கள் ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் சொல்லியவைதான்" என்பதே இந்த முடிவுகள் குறித்து அவர்கள் வைக்கும் வாதம். அது உண்மையும் கூட. ஆனால், தற்போதைய பி.ஜே.பி.யின் அணுகுமுறைக்கும், 2004-ல் அந்தக் கட்சியின் அணுகுமுறைக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. இன்றைக்கு இந்த எல்லா முடிவுகளுக்கும் பெருமளவில் அக்கட்சி எதிர்ப்பைச் சந்திக்கவும், இந்த அணுகுமுறை மாற்றமும் ஒரு காரணம். அப்படி என்ன அந்த மாற்றம்?

2004-ம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கும் முன்பு `விஷன் 2004' என்னும் கொள்கை விளக்கப் புத்தகத்தை வெளியிட்டது பி.ஜே.பி. அதில் ``அயோத்தி நில வழக்கு, சட்டப்பிரிவு 370, பொது சிவில் சட்டம் போன்ற விஷயங்களில் அனைத்துப் பிரிவினரிடமும் பேசி கருத்தொற்றுமையை ஏற்படுத்துவோம்" எனத் தெரிவித்தது அக்கட்சி. ஆனால், அந்தக் கருத்திலிருந்து அந்தக் கட்சி எந்தளவு விலகிப்போய் நிற்கிறது என்பதற்கு தற்போது நாட்டில் நடக்கும் சம்பவங்களே சாட்சி. அப்போது `விஷன் 2004'-ல் பி.ஜே.பி இன்னும் என்னவெல்லாம் சொன்னது?

07/04/2004 ஜுனியர் விகடன் இதழில் வெளியான அந்தக் கட்டுரை #VikatanOriginal-லில் முழுமையாக இங்கே...

ஜுனியர் விகடன் இதழில் வெளியான அந்தக் கட்டுரை
ஜுனியர் விகடன் இதழில் வெளியான அந்தக் கட்டுரை
ஜுனியர் விகடன் இதழில் வெளியான அந்தக் கட்டுரை
ஜுனியர் விகடன் இதழில் வெளியான அந்தக் கட்டுரை
`எம்மதமும் சம்மதமே!' - விவேகானந்தர் காட்டிய இந்து தர்மம் வழி நடக்கிறதா பா.ஜ.க? #VikatanOriginals

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |