Published:Updated:

மத்திய அரசுக்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டம் - திமுக அரசு எப்படிக் கையாள்கிறது?

பொது வேலைநிறுத்தப் போராட்டம் - பந்த்

மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெற்றுவரும் சூழலில், தமிழகத்தில் திமுக அரசு அதை எப்படிக் கையாள்கிறது?

மத்திய அரசுக்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டம் - திமுக அரசு எப்படிக் கையாள்கிறது?

மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெற்றுவரும் சூழலில், தமிழகத்தில் திமுக அரசு அதை எப்படிக் கையாள்கிறது?

Published:Updated:
பொது வேலைநிறுத்தப் போராட்டம் - பந்த்

பொது வேலைநிறுத்தம்

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கக் கூடாது, மத்திய அரசின் அலுவலகங்களிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் நேற்றும் இன்றும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தில், மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் பலவும் பங்கேற்கின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் பல்வேறு மாநிலங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

பொது வேலைநிறுத்தப் போராட்டம்
பொது வேலைநிறுத்தப் போராட்டம்

தமிழகத்தில் ஆளும் திமுக-வின் தொழிற்சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வங்கி, தொலைத் தொடர்பு, தபால்துறை முதல் போக்குவரத்துத்துறை வரை பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, திங்கள் அன்று குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன. இதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கேரளா போன்ற மாநிலங்களில் கடையடைப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழக அரசு, `ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. தமிழகத்தில் நடைபெற்ற பந்த் குறித்து அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், பாபு முருகவேலிடம் பேசினோம். `` `பாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலையையும் காட்டும் விலாங்கு மீனின் கதைதான் திமுக-வுடையது. வெளிப்படையாக பாஜக-வை எதிர்ப்பதுபோல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி, உள்ளுக்குள் பாஜக-வுடன் நட்பு பாராட்டிவருகிறார்கள். இதற்கு, டெல்லியில் அறிவாலயம் திறக்க அழைப்பிதழ் கொடுத்தது முதல் கலைஞர் சிலை திறப்பு அழைப்பிதழில் அமித் ஷாவின் பெயரைப் போட்டது வரை பல உதாரணம் சொல்லலாம்" என்றார்.

பாபு முருகவேல்
பாபு முருகவேல்

மேலும், ``முதல்வர் ஒரு மாதிரி இங்கே பேசுவார். நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு வேறு மாதிரி பேசுவார். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைப் பொறுத்தவரை, ஓய்வூதிய நிலுவை முதல் போனஸ் என்று பல்வேறு காரணங்களுக்காகப் போராட்டம் நடத்தினர். அது இந்த பாரத் பந்தோடு இணைந்துவிட்டது. அது வேறு... இது வேறு. ஒரு பக்கம் பாஜக-வை எதிர்ப்பது போன்றும் இருக்க வேண்டும். மற்றொரு பக்கம் அவர்களோடு இணக்கமாகச் செல்ல வேண்டும் என்பதைத்தான் திமுக-வினர் செய்துவருகிறார்கள்" என்று பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``சொல் ஒன்று செயல் ஒன்று அதுதான் திமுக. அவர்கள் சொல்வதற்கும் செய்வதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கும். அரசு சார்பில் ஊழியர்கள் போராடக் கூடாது என்று அறிவித்துவிட்டு, தங்களின் தொழிற்சங்கங்களின் சார்பில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது இந்த திமுக அரசு. முதலில் இந்த பந்த்-துக்கு தமிழகத்தில் பெரிய அளவில் எந்த வெற்றியும் கிடையாது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

ஒரு பக்கம் அரசுப் பேருந்துகளை நிறுத்திவிட்டு, இன்னொரு பக்கம் ஷேர் ஆட்டோகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுகிறார்கள். பேருந்து ஓடாததனால்தானே அவர்கள் அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள்... அந்தச் சூழலுக்கு யார் காரணம்... அப்போது பேருந்தை ஓட்ட வராத நபர்களின் மீதுதானே நடவடிக்கை எடுக்க வேண்டும்... கட்சியின் நிலைப்பாடு ஒன்றாகவும், ஆட்சியின் நிலைப்பாடு ஒன்றாகவும் இருப்பது தவறான ஒன்று" என்று பேசினார்.

பாரத் பந்தை திமுக அரசு எப்படிக் கையாள்கிறது என்பது தொடர்பாக, தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``முதலில் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அரசு என்பது வேறு. கட்சி என்பது வேறு. தொழிலாளர்கள் அவர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடுகிறார்கள். திமுக ஒரு பொதுநல இயக்கம், மக்கள் இயக்கம். ஆகவே, அவர்களின் போராட்டத்தை திமுக ஆதரிக்கிறது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

ஆளும் அரசு என்பதால் மக்களின் நலனில் அக்கறைகொள்ள வேண்டும். மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். அதனால்தான் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் `No Work: No Pay' என்ற அடிப்படையில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு பொதுநல இயக்கமாகக் கட்சி ஆதரித்த விஷயங்கள் வேறு. ஆளும் அரசாகச் செய்யவேண்டிய கடமைகள் வேறு" என்று பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism