Published:Updated:

`ரப்பர் ஸ்டாம்ப்' பதவியா? நாட்டின் முதல் குடிமகனா? ஜனாதிபதி தேர்தல் எப்படி நடக்கிறது?|Explainer

இந்திய பாராளுமன்றம்

தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் எப்படி நடக்கிறது?

`ரப்பர் ஸ்டாம்ப்' பதவியா? நாட்டின் முதல் குடிமகனா? ஜனாதிபதி தேர்தல் எப்படி நடக்கிறது?|Explainer

தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் எப்படி நடக்கிறது?

Published:Updated:
இந்திய பாராளுமன்றம்
இந்தியாவின் முதல் குடிமகன் என்று நம் ஜனாதிபதியைச் சொல்கிறோம். ஆனால், குடிமக்களாகிய நாம் வாக்களித்து அவரைத் தேர்வு செய்வதில்லை. மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே இந்தத் தேர்தலில் வாக்களிக்கிறார்கள். பல நாடுகளில் மக்களே நேரடியாக வாக்களித்து ஜனாதிபதியைத் தேர்வு செய்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரங்களும் அதிகம். மறைமுகத் தேர்தல் மூலம் இந்திய ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவதால், பிரதமரைவிட அவருக்கு அதிகாரங்கள் குறைவு. மத்திய அமைச்சரவை கூடி எடுக்கும் முடிவுக்கு ஒப்புதல் கொடுக்கும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போலவே ஜனாதிபதி செயல்படுகிறார் என்று சொல்லப்படுவது உண்டு.

தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. எனவே, புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் எப்படி நடக்கிறது?

இந்திய பாராளுமன்றம்
இந்திய பாராளுமன்றம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருக்கும் நியமன உறுப்பினர்கள் யாரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியாது. எனவே, 233 மாநிலங்களவை உறுப்பினர்கள், 543 மக்களவை உறுப்பினர்கள் என 776 எம்.பி-க்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப் போகிறார்கள்.

இந்தியா முழுக்க இருக்கும் 28 மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், டெல்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச எம்.எல்.ஏ-க்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியும். இங்கும் நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு வாக்குரிமை இல்லை. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துக்கு இன்னும் தேர்தல் நடக்கவில்லை. எனவே, இந்தியா முழுக்க 4,033 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.

ஒவ்வோர் உறுப்பினரின் வாக்குக்கும் தனித்தனி மதிப்புகள் உண்டு. உதாரணமாக, ஒரு எம்.பி-யின் வாக்கு 700 மதிப்பு கொண்டது. எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்பு, அந்த மாநிலத்தின் மக்கள்தொகை, அந்த மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். 1971-ம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையிலேயே இதைத் தீர்மானிக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் எம்.எல்.ஏ-க்களுக்கு வாக்கு மதிப்பு அதிகம். ஒரு எம்.எல்.ஏ-வுக்கு வாக்கு மதிப்பு 208. அடுத்தபடியாக தமிழகம் மற்றும் ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு 176 ஆக இருக்கிறது. சிக்கிம் மாநில எம்.எல்.ஏ ஒருவரின் வாக்கு மதிப்பு வெறும் 7 மட்டுமே. மிசோரம், அருணாசலப் பிரதேச எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு 8.

யார் ஜனாதிபதி ஆக முடியும் என்பதற்கான தகுதிகளையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது. இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 35 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இந்திய அரசில் ஆதாயம் தரும் பதவி எதையும் வகிக்கக்கூடாது. எனினும் துணை ஜனாதிபதி, மாநில கவர்னர்கள், மத்திய, மாநில அமைச்சர்களுக்கு இதில் விதிவிலக்கு உண்டு. அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு, ஜெயித்து ஜனாதிபதி ஆனதும், அவர்களின் பழைய பதவி இயல்பாகப் பறிபோய்விடும்.
ஜானதிபதி தேர்தல்
ஜானதிபதி தேர்தல்

ஜனாதிபதி ஆவதற்கான தகுதிகள்:

  • எம்.பி தேர்தலில் போட்டியிட என்னென்ன தகுதிகள் உண்டோ, அத்தனை தகுதிகளும் ஜனாதிபதி தேர்தலுக்கும் பொருந்தும். ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் ஒருவரின் வேட்புமனுவை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் என 50 பேர் இணைந்து முன்மொழிய வேண்டும். அவர்களைத் தவிர வேறு 50 பேர் இணைந்து வழிமொழிய வேண்டும். சிறிய கட்சிகள் நிறைய பேரை நிறுத்தி தேர்தல் நடைமுறையை சிக்கலாக்கிவிடக்கூடாது என்பதால்தான் இப்படி விதி வகுத்துள்ளனர்.

  • ஜனாதிபதி தேர்தலுக்கான டெபாசிட் தொகை 15 ஆயிரம் ரூபாய்.

  • எல்லா தேர்தல்களையும் நடத்தும் தேர்தல் கமிஷன்தான் இந்தத் தேர்தலையும் நடத்துகிறது. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் இயந்திரம் இருக்காது. 'இவருக்குத்தான் என் வாக்கு' என முத்திரை குத்தும் வழக்கமும் இல்லை. வேட்பாளர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டிருக்கும். அவர்களில் யாருக்கு என் வாக்கு என எழுத வேண்டும். இதற்கு தேர்தல் கமிஷன் தரும் பேனாவையே பயன்படுத்த வேண்டும். வேறு பேனாவைப் பயன்படுத்தினால், அந்த ஓட்டு செல்லாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜனாதிபதிக்கான வசதிகள்

  • ஜனாதிபதிக்கு மாதச் சம்பளம் ஐந்து லட்சம் ரூபாய். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் அவர் குடியிருக்கலாம். உலகிலேயே மிகப்பெரிய ஜனாதிபதி மாளிகை இதுதான்.

  • இதுதவிர ஹைதராபாத் மற்றும் சிம்லாவில் அவர் ஓய்வெடுக்க இரண்டு மாளிகைகள் உள்ளன.

  • பயணங்களுக்கு தனி விமானம், தனி ஹெலிகாப்டர் பயன்படுத்தலாம். ஓய்வுபெற்ற பிறகு ஆயுள் வரை குடியிருக்க அரசு வீடு தரப்படும்.

  • ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்தாலோ, தகுதியை மறைத்துக் காட்டி தேர்தலில் நின்றாலோ, அவரைப் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது.

  • ஒரு ஜனாதிபதி அரசியல் சட்டத்துக்கு முரணாக செயல்பட்டால், நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றி அவரைப் பதவிநீக்கம் செய்ய முடியும். இப்படி இதுவரை யாரும் பதவிநீக்கம் செய்யப்பட்டதில்லை.

ஜனாதிபதியின் அதிகாரங்கள்:

  • ஜனாதிபதிக்கு பல்வேறு அதிகாரங்கள் உண்டு. மரண தண்டனை விதிக்கப்படும் ஒரு கைதிக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது.

  • நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்த மசோதாவும், ஜனாதிபதி கையெழுத்து போட்டால் மட்டுமே சட்டமாகும். கவர்னர்கள், தேர்தல் ஆணையர்கள் போன்றோரை இவரே நியமிக்கிறார்.

  • இந்திய முப்படைகளின் தலைவர் ஜனாதிபதிதான். நம் நாட்டின் சார்பில் பிற நாடுகள் மீது போர் தொடுக்கும் அறிவிப்பை அவர்தான் வெளியிடுகிறார்.

  • பொதுத் தேர்தலுக்குப் பிறகு பிரதமருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதும் அவர்தான். ஒரு பொதுத்தேர்தல் குழப்பமான முடிவைத் தந்தால், யாரை ஆட்சிப் பொறுப்பேற்க அழைப்பது என்று முடிவெடுக்கும் உரிமை ஜனாதிபதிக்குத்தான் இருக்கிறது.

'ரப்பர் ஸ்டாம்ப்' என்று சொன்னாலும், இதுபோன்ற காரணங்களால்தான் ஜனாதிபதி தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism